Advertisment

திருமாவின் பிறந்தநாள் விழாவில் நக்கீரன் ஆசிரியர் புகழாரம்!

Advertisment

விசிக கட்சி தலைவர் திருமாவளவனின்பிறந்த நாளைமுன்னிட்டு சென்னை பெரியார் திடலில் திருக்குறள் தடத்தில் திருமா!, ஊடகவியலாளர்களின் பார்வையில் திருமா! என்கிற நிகழ்ச்சி அரங்கேறியது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக வரவேற்று உரை நிகழ்த்தி வன்னிசியரசு தொடங்கிவைத்தார். “இதில் திருக்குறள் தடத்தில் திருமா” என்ற தலைப்பிற்குகவிஞர் பழனிபாரதி தலைமை வகிக்க கவிப்பொழிவை கவிஞர் யுகபாரதி, கவிஞர் ராசிஅழகப்பன், கவிஞர் இளையகம்பன், கவிஞர் அருண்பாரதி, கவிஞர் தேன்மொழி ஆகியோர் வழங்கினர்.

“ஊடகவியலாளர்களின் பார்வையில் திருமா” என்ற தலைப்புக்குஆசிரியர் நக்கீரன் தலைமை வகிக்க, விஜயசங்கர் ஜெயராமன், மை.பா.நாராயணன் கிருத்திகா, வாழ்த்தரங்கம் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், சிந்தனைச்செல்வன், ரவிக்குமார், மு.முகமதுயூசுப், கரு.பழனியப்பன், ரங்கராஜ் பாண்டே, நீலவானத்துநிலவன் வாழ்த்துரை வழங்கினர்.

Advertisment

ஊடகவியாளர்களின் பார்வையில் திருமா என்பதில்பேசிய நக்கீரன் ஆசிரியர், திருமாவை நான் ஒரு போராளியாக பார்க்கிறேன். அதேபோன்று இவ்வளவு சிறுத்தைப்படைகளை வைத்துக்கொண்டு மிக எளிமையாகஇருப்பதே அவரின் தலைமைப்பன்பை காட்டுகிறது. என்னைப்போன்றவர்களுக்கு எதையும் துணிந்து எழுதுவதற்கு திருமா போன்ற தலைவர்கள் எங்கள் பின்னால் இருப்பதால்தான் மோடி போல் எத்தனைமோடி வந்தாலும் அடிப்போம், இந்த பாடி அல்ல எத்தனை எடப்பாடி வந்தாலும் அடிப்போம்.

நான் எப்போதும்திருமாவிற்குநன்றிகடன்பட்டுள்ளேன். அதை எத்தனை மேடைகளில்வேண்டுமானாலும் சொல்லுவேன். 'மாட்டுக்கறிமாமி' என்கிற தலைப்புக்கு எங்கள் அலுவலகத்தை ஜெ. அரசு எங்களைதாக்கியபோது முதல் குரல்கொடுத்ததுகலைஞர், அடுத்த குரல்திருவமாவின் குரலாகஇருந்தது. அந்த பலம் எங்களை ஊக்கப்படுத்துகிறது.

அதேபோல அவர் சொல்லுவார்,நான் தலித் என்பதால் புத்தரோடும், அம்பேத்காரோடும் மட்டுமே இருந்திருந்தால் நான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பேன். ஆகவேதான் பெரியைரையும், மார்கியஸ்த்தையும் இணைத்து நடைபோடுகிறேன் என்கிறார். அந்த பாதை இருக்கிறதே அதனால்தான் திருமாவை இன்றைக்கும் சாதிய தலைவனாக இல்லாமல் இந்த சமூகத்திற்கான தலைவராக நிர்கிறார். நான் திருமாவை சாதிய தலைவராக பார்க்கவில்லை ஒரு சமூகத்திற்கான தலைவராகத்தான் பார்க்கிறேன். திருமா பல்லாண்டு வாழவேண்டும் என்றார்.

இறுதியாக பேசியவிசிக தலைவர் தொல். திருமாவளவன்,ஆகத்து 17 முதல் செப்படம்பர் தந்தை பெரியார் பிறந்தாள் வரை புதிய கல்விக் கொள்கை குறித்து ஒவ்வொரு குக்கிராமங்களுக்கும் விடுதலைசிறுத்தைகள் சென்று பரப்புரை வழங்கவேண்டும். பனைவிதைகள் ஊன்றுவதை தீவரமாக நடைமுறைபடுத்த வேண்டும். ஈழத்தில் மரம் நடுகை மாதம் கார்த்திகை, அது தமிழகத்தில் ஆகத்து மாதமாக என வருடந்தோறும் கடைபிடிக்க வேண்டும். இதுதான் என்னுடைய பிறந்தநாள் செய்தி எனநிறைவு செய்தார்.

nakkheeran gopal thiruma valavan vck nakkheeran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe