"ரஜினியுடன் தேவைப்பட்டால்தான் இணைவேன்"- நடிகர் கமல்ஹாசன் பேச்சு!

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை செய்தார்.

nakkal needhi maiam party meeting in chennai president kamal hassan speech

ஒடிஷா பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியதற்கு கமலுக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "நெகிழ்ந்து போயிருக்கும் என்னை வந்து வாழ்த்தி மேலும் நெகிழச் செய்திருக்கிறீர்கள். எனக்காக நீங்கள் காட்டும் அன்பை தமிழக மக்களுக்கும் காட்ட வேண்டும். நீங்கள் காட்டிய அன்பு செயல் வடிவமாக மாற வேண்டும்.

nakkal needhi maiam party meeting in chennai president kamal hassan speech

தமிழகத்திற்கு பயனுள்ளதாக மாற வேண்டும். வேலை வாய்ப்பு, விவசாயம் துறைகள் முதலுதவி தேவைப்படும் துறைகள் என்பதை உணர்ந்துள்ளோம். ஆட்சிக்கு வந்து செய்வதைப்போல, அதற்கு முன்பே வேலைவாய்ப்பு, விவசாயம் துறைகளை மேம்படுத்தும் பணிகளை செய்வோம். ஆரம்ப கட்ட வேலைகளை தொடங்கி விட்டோம். விரைவில் நாம் செயல்படுவோம். தமிழகத்திற்கு தேவைப்பட்டால் இணைவோம் என்று தான் நானும், ரஜினியும் குறிப்பிட்டுள்ளோம். நட்பை விட முக்கியமான செய்தி தமிழகத்தின் நலன். தமிழகத்திற்காக உழைப்போம் என்ற நல்ல செய்தியை அதில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள். என்னுடைய பணியை நான் செயலில் காட்ட உள்ளேன்". என்றார்.

Chennai Makkal needhi maiam party meeting Speech
இதையும் படியுங்கள்
Subscribe