water

புதுச்சத்திரம் அருகே ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி காய்கிறது விவசாயிகள் கவலை என்ற தலைப்பில் நக்கீரன் இணையதள செய்தியில் கடந்த சனிக்கிழமை இரவு செய்தி மற்றும் படங்களுடன் பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக, இதனை பார்த்த தொலைக்காட்சி செய்தியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள பாதிப்புகளை பதிவு செய்தனர். இந்த செய்திகள் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பார்வைக்கு சென்றது. பின்னர் அது குறித்த விவரத்தை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்ததின் பேரில், சிதம்பரம் கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ் உத்தரவின் பேரில் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாறு வடக்கு ராஜன் வாய்க்காலின் கிளை வாய்க்காலான மானம்பாத்தான் வாய்க்காலில் பொதுப்பணித் துறை ஊழியர்கள் காய்ந்து கிடக்கும் நெற்பயிர் நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டனர். இதனை விவசாயிகள் மலர் தூவி வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.