Advertisment

நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

md

ஆளுநர் புகார் தொடர்பாக நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Advertisment

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி குறித்து தொடர்ந்து நக்கீரன் பத்திரிகையில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

Advertisment

கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியரை ஒருமணி நேர விசாரணைக்குப் பிறகு, அடையாறு சரக போலீஸார் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர். பின்னர் எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அன்று மாலையே விடுவித்தது.

மேலும், ஆளுநர் மாளிகையின் புகாரினைத்தொடர்ந்து, நக்கீரன் பொறுப்பாசிரியர் லெனின் உள்ளிட்ட 35 நக்கீரன் ஊழியர்கள் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை நீதிபதி தண்டபாணி முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

nakkheeran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe