sankar

Advertisment

சென்னை அண்ணா நகரில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலானது ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில் நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், நடிகர் சூரி, கருணாஸ்மற்றும் அவருடைய பயிற்சி வகுப்பு மாணவர்கள் உட்பட பலர்சென்று இரங்கல் தெரிவித்தனர்.

nakkheeran

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய நக்கீரன் ஆசிரியர்,

nakkheeran

Advertisment

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் எனஅவரிடம் படித்த மாணவர்கள்தான்இந்தியா முழுவதும் தற்போதுபரந்துவிரிந்து கிடக்கின்றனர். சமீபகாலமாக இங்கு கூடியுள்ள யாருக்கும் இதுபோன்ற அதிர்ச்சி வந்ததில்லை. இது யாராலும் ஜீரணிக்க முடியாத ஒரு அதிர்ச்சி சம்பவம் எனக்கூறினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் சூரி,

soori

என்னால் உருவாக்கப்பட்ட அனைவரும் நம் கண்முன் வந்து நிற்க வேண்டும் என்பார். ஆனால் இன்னைக்குஇப்படியா நிற்க வைப்பது அவர். ரொம்ப வேதனையாக இருக்கிறது. தம்பி நல்லா சம்பாரிக்கிற பிற்காலத்துல ஐ.ஏ.எஸ் படிக்க ஒரு கட்டிடம் காட்டுங்க இலவசமாஎன என்னிடம் சொல்லுவாரு நான் கண்டிப்பா செய்வேன். இது மிகப்பெரிய இழப்பு. அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.