நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களை பொய்வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்து திட்டக்குடி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் திட்டக்குடி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

naKKHEERAN

ஆர்ப்பாட்டத்திற்கு திட்டக்குடி பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ஜிகே ராஜா தலைமை தாங்கினார். மூத்த பத்திரிகையாளர் ரங்கநாதன் ராதா பாஸ்கர் எஸ் பி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதிதாசன், சின்னு, ரவிச்சந்திரன், பாலமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் பத்திரிக்கையின் வாசகர்கள் பலர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் பொய் வழக்கிலிருந்து நக்கீரன் கோபால் அவர்களை விடுதலை செய்ய கோரி தங்களின் கண்டனத்தை கோஷமிட்டு தெரிவித்தனர்.