Skip to main content

கோலாகலமாக துவங்கிய நாகூர் கந்தூரி விழா...

Published on 15/01/2021 | Edited on 15/01/2021
Nagore Kanthuri Festival which started with a bang ..

 

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 464 வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்புற விழா தொடங்கியது.

 

உலக புகழ்பெற்ற இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தளங்களுள் நாகூர் தர்காவும் ஒன்று,  நாகூர் தர்காவின் கந்தூரி விழா வருடா வருடம் பல லட்சம் மக்கள் கலந்துகொண்டு, வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

 

Nagore Kanthuri Festival which started with a bang ..

 

 

14 நாட்கள் நடைபெறும் இந்த விழா தொடர் மழையால் விமரிசையாக இருக்காது என பலதரப்பட்ட  மக்களும் பேசிவந்த நிலையில், அந்த எண்ணங்களை தகற்த்தெறியும் விதமாக மக்கள் அலை அலையாக கூடி 464 வது கந்தூரி விழா கொடியேற்றத்தை கோலாகலமாக துவக்கிவைத்தனர்.

 

நாகை மீரா பள்ளியில் இருந்து வழக்கமாக 50 க்கும் மேற்பட்ட கப்பல் ஊர்வலங்கள் வருவது வழக்கம்,  இந்த ஆண்டு கரோனா காரணமாக மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்ன ரதம் உள்ளிட்ட மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட எட்டு கப்பல்களில் மட்டுமே கொடி ஊர்வலம் நடைபெற்றது.

 

நாகை நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த கொடி ஊர்வலம், நேற்று இரவு நாகூர் தர்காவின் அலங்கார வாசல் வந்தடைந்து. பின்னர் புனித கொடிகள்  பாத்தியா ஒதப்பட்டு தர்காவின் 5 மினராக்களிலும் ஏற்றப்பட்டு கந்தூரி விழா தொடங்கியது.

Nagore Kanthuri Festival which started with a bang ..

 

அப்போது வண்ண விளக்குகளால் மினராக்கள் ஜொலிக்க விண்ணதிர போடப்பட்ட வாணவேடிக்கைகளை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இந்த கடினமான சூழலிலும் கந்தூரி விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

கந்தூரி விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு ஊர்வலம் வரும் 23 ம் தேதியும்,  பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி  24 ம் தேதி அதிகாலையும் நடைபெற இருக்கிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நியாயம் கேட்க வந்தவரை பூட்சால் உதைத்த நாகூர் எஸ்ஐ; நாகையில் பரபரப்பு

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

Nagor S.I palanivel who kicked the person who came to seek justice

 

நாகையில் அரசு பேருந்து செல்லமுடியாமல் காவல்துறையினர் தடுப்பு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை காவல் உதவி ஆய்வாளர் அடித்து, பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு உண்டாக்கியுள்ளது.

 

தமிழக எல்லையான நாகை அடுத்துள்ள நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் இருசக்கர வாகனத்தில் சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக திருமருகல் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நான்கு சாலைகளில் இரண்டு சாலைகள் ஒருவழி பாதையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பேருந்து மற்றும் பெரு வாகனங்கள் வளைய முடியாமல் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

 

நேற்று இரவு கும்பகோணத்தில் இருந்து நாகை வந்த இரண்டு அரசு பேருந்துகள் பயணிகளுடன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. அவ்வழியே சென்ற உள்ளூர் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் சிலர் தடுப்புகளை அகற்றி அரசு பேருந்து எளிமையாக செல்ல வழிவகை செய்ய வேண்டுமென கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணிகள் வெகுநேரம் சிரமப்பட்டதையடுத்து வாக்குவாதத்திற்கு பிறகு தடுப்புகள் அகற்றப்பட்டு பேருந்துகள் செல்ல வழிவகை செய்யப்பட்டது. 

 

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிவேல் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை கடுமையாக தாக்கியதோடு ஒருமையில் பேசினார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த உதவி ஆய்வாளர் பழனிவேல் போராட்டம் நடத்திய நபரை கடுமையாக தாக்கி, காவல் வாகனத்தில் ஏற்றி தனது பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்து அடாவடியில் ஈடுபட்டார். தொடர்ந்து காவல் வாகனத்தில் ஏற்றிய பிறகும் வாகனத்தின் உள்ளே இருந்த சக காவலர்கள் கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்து தாக்கியபடி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.  இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் எஸ.ஐ பழனிவேல்  ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

 

அரசு பேருந்து எளிமையாக செல்லும் வகையில் காவல் தடுப்புகளை அகற்ற வலியுறுத்திய நபரை காவல் உதவி ஆய்வாளர் அடித்து உதைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

நாகூர் தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வக்பு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 15/04/2022 | Edited on 15/04/2022

 

High Court directs Waqf Board to hand over Nagore Dargah administration to trustees

 

நாகூர் தர்கா நிர்வாகத்தை தற்காலிக குழுவிடமிருந்து அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வக்பு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

கடந்த 2017- ஆம் ஆண்டு நாகூர் தர்கா நிர்வாகம் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓய்வுப் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலாவுதீன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியான அக்பர் அடங்கிய தற்காலிக குழுவை நியமித்தது. 

 

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், நான்கு மாதங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டக் குழு இன்னும் தொடர்வது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். 

 

இதனையடுத்து, நாகூர் தர்கா நிர்வாகத்தைத் தொடர விரும்பவில்லை என்றும், வக்பு வாரியத்திடம் ஒப்படைப்பதாகவும் தற்காலிகக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 

அப்போது, 1946- ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டப்படி, தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்களிடம் வழங்கலாம் என்று மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர். அதனையேற்ற நீதிபதிகள், நாகூர் தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வக்பு வாரியத்துக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஜூன் மாதம் 15- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.