Advertisment

அக்காவை கொடுமை செய்த மாமாவை தீர்த்துக்கட்டிய மைத்துனர்

நாகூர் அருகே அக்காவை கொடுமைப்படுத்திய மைத்துனரை கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசிய தம்பி கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.

Advertisment

நாகை அடுத்த நாகூர் வெட்டாற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக நாகூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, விசாரணையில் இறங்கினர். அப்போது சம்பவ இடத்தில் உயிரிழந்த நபரின் கைப்பேசி ஒன்றை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தினர்.

Advertisment

விசாரணையில் உயிரிழந்த நபர் திருவாரூர் மாவட்டம் சிவன்கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் என்பதும், அவரது மைத்துனர் கார்த்திக் என்பவருடன் காரைக்காலுக்கு மது அருந்ததும் வந்ததும் தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் திருவாரூர் அடுத்துள்ள கீழ கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக்கை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரனை குறித்து காக்கிகளிடம் கேட்டபோது, " கார்த்திக்கின் அக்காவை மகேந்திரன் திருமணம் செய்திருக்கிறார். ஒரு வார காலமாக கார்த்திக்கின் அக்காவை மகேந்திரன் குடித்துவிட்டு வந்து அடித்து கொடுமை படுத்தியிருக்கிறார். இதனால் கோபமடைந்த கார்த்திக் தனது மைத்துனர் மகேந்திரனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டு காரைக்கால் அழைத்து வந்து, மது வாங்கிக் கொடுத்து நாகூர் வெட்டாற்று கரையில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசியிருக்கிறான். குற்றத்தை ஒப்புக்கொண்ட கார்த்திக்கின் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கார்த்திக் சிறையில் அடைப்பட்டுள்ளான்."என்கிறார்கள்.

nagoor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe