Advertisment

அயோத்தி தீர்ப்பு... போலீஸ் பாதுகாப்பில் நாகூர் தர்ஹா...

அயோத்தி தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

nagoor mosque under control of police

இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தளமான நாகூர் தர்ஹா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் நாகூர், நாகை, சிக்கல், கோடியக்கரை, பூம்புகார், தைக்கால் உள்ளிட்ட 36 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

nagoor mosque under control of police

Advertisment

தமிழக எல்லையான மேலவாசல் சோதனைச் சாவடியில் மாநிலத்தின் உள்ளே செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வாகனத்தின் பதிவு எண், ஓட்டுநர் பெயர், கைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் முழுமையையும் காவல்துறையினரால் பதிவு செய்யப்படுகிறது.

babar mazjid nagoor police
இதையும் படியுங்கள்
Subscribe