Skip to main content

அக்காவை கொடுமை செய்த மாமாவை தீர்த்துக்கட்டிய மைத்துனர்

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

 

நாகூர் அருகே அக்காவை கொடுமைப்படுத்திய மைத்துனரை கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசிய தம்பி கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.

 

நாகை அடுத்த நாகூர் வெட்டாற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக நாகூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, விசாரணையில் இறங்கினர். அப்போது சம்பவ இடத்தில் உயிரிழந்த நபரின் கைப்பேசி ஒன்றை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தினர்.

 

விசாரணையில் உயிரிழந்த நபர் திருவாரூர் மாவட்டம் சிவன்கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் என்பதும், அவரது மைத்துனர் கார்த்திக் என்பவருடன் காரைக்காலுக்கு மது அருந்ததும் வந்ததும் தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் திருவாரூர் அடுத்துள்ள கீழ கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக்கை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். 

 

விசாரனை குறித்து காக்கிகளிடம் கேட்டபோது, " கார்த்திக்கின் அக்காவை மகேந்திரன் திருமணம் செய்திருக்கிறார்.  ஒரு வார காலமாக கார்த்திக்கின் அக்காவை மகேந்திரன் குடித்துவிட்டு வந்து அடித்து கொடுமை படுத்தியிருக்கிறார்.   இதனால் கோபமடைந்த கார்த்திக் தனது மைத்துனர் மகேந்திரனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டு காரைக்கால் அழைத்து வந்து, மது வாங்கிக் கொடுத்து நாகூர் வெட்டாற்று கரையில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசியிருக்கிறான். குற்றத்தை ஒப்புக்கொண்ட கார்த்திக்கின் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  கார்த்திக் சிறையில் அடைப்பட்டுள்ளான்."என்கிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒருபக்கம் கருப்புக்கொடி; மறுபக்கம் வரவேற்பு - நாகூர் தர்காவில் ஆளுநர்

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
Black flag struggle for Governor RN Ravi who came to Nagai

உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடைபெற உள்ளது. விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என தர்கா அரங்காவலர் குழு அழைப்பு விடுத்திருந்தது, அதே நேரம் ஆளுநர் ரவி சந்தனக்கூடு நிகழ்விற்கு வந்தால், சட்ட ஒழுங்கு என்கிற பெயரில் வியாபாரம் பாதிக்கும் என வர்த்தக சங்கத்தினர் மாவட்ட எஸ்,பியிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், நாகூர் தர்காவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வருகை புரிந்தார். கவர்னர் வருகையால் அலங்கார வாசல் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுற்றிலுள்ள ஒருசில கடைகள் அடைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து தர்கா வந்தடைந்த கவர்னருக்கு பாரம்பரிய முறைப்படி வழக்கமாக தர்கா மணி மேடையில் அமர்ந்திருந்தபடி நகரா மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

Black flag struggle for Governor RN Ravi who came to Nagai

ஆளுநர் ஆர்.என்.ரவியை அலங்கார வாசலில் நாகூர் தர்ஹா தலைமை அறங்காவலர் ஹாஜி உசேன் சாஹிப், ஆலோசனை குழு உறுப்பினர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், நாகை எஸ்பி ஹர்ஷிங் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தர்காவினுள் சென்ற ஆளுநர் பெரிய ஆண்டவர் சமாதியில் இஸ்லாமியர்களோடு சிறப்பு துவா ஓதப்பட்ட நிகழ்வில் பங்கேற்றார்.

பின்னர் தர்கா வாசலில் வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், ''467 வது கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள். புனிதரின் ஆசீர்வாதங்களைப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பாரதத்தின் கலாச்சாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் பழமை வாய்ந்த இந்த தர்கா பிரதிபலிக்கிறது''  அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்று எழுதினார். 

Black flag struggle for Governor RN Ravi who came to Nagai

முன்னதாக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட எல்லையில் கீழ்வேளூர் புறவழிச்சாலையில் காங்கிரஸ், விசிக கம்யூனிஸ்ட் திக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஆளுநர் வருகைக்கு முன்பாகவே காவல்துறையினர் கைது செய்தனர். அரசியல் கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாகூர் தர்காவில் ஆளுநர் தரிசனம் மேற்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

ஆளுநர் வருகையால் எங்களுக்கு பாதிப்பு! - வர்த்தக சங்கத்தினர் மனு

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
We are affected by the governor's visit! - Petition of Trade Unions

நாகூர் கந்தூரி விழாவிற்கு கவர்னர் வந்தால், வர்த்தகம் பாதிக்கப்படும், சிறப்பு விருந்தினரின் வருகையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என வணிகர் சங்கத்தினர் ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்கானிப்பாளருக்கு மனு அளித்துள்ளனர்.

நாகை மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவின் 467ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் வைபவம் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு உலகம் முழுவதிலிருந்தும் அன்பர்கள் வந்து கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு நடக்கவிருக்கும் சந்தனம்பூசும் விழாவில் பங்கேற்பதற்காக வரும் 23ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாகூருக்கு வருகை தர உள்ளார்.

We are affected by the governor's visit! - Petition of Trade Unions

இதனிடையே கந்தூரி விழாவிற்கு கவர்னர் வந்தால், பாதுகாப்பு என்கிற பெயரில் பொதுமக்களுக்கு கெடுபிடி ஏற்படுவதுடன், பதட்டமான சூழலை உண்டாக்கி அதனால் வர்த்தகம் பாதிக்கப்படும் எனக் கூறி நாகூரைச் சேர்ந்த வணிகர் சங்கத்தினர் இன்று நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்கிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் சிறப்பு விருந்தினரின் வருகையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதே கோரிக்கைகளை முன்வைத்து நாகூர் தர்கா சாகிபுமார்கள் முன்னேற்ற சங்கம் சார்பிலும் எஸ்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதற்கிடையே ஆண்டவர் கந்தூரி விழாவிற்கு வருகை தருமாறு நாகூர் தர்ஹா பரம்பரை ஆதீனஸ்தர்கள் சார்பில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அமைச்சர்களான செஞ்சி மஸ்தான், ரகுபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.