Advertisment

காசியின் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி போராட்டம் நடத்திய மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

nagercoil

நாகா்கோவில் காசியின் பாலியல் வேட்டையில் 90க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், வசதி வாய்ந்த குடும்பப் பெண்கள் பாதிக்கபட்டுள்ளனா். அந்தப் பெண்களின் ஆபாச வீடியோவை அவா்களிடமே காட்டி பல லட்சங்களைகறந்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததோடு அதில் பல பெண்களை அவனுடைய நண்பா்களுக்கும் இரையாக்கியுள்ளான்.

Advertisment

இந்த நிலையில் பாதிக்கபட்ட பெண்கள் காசியிடம் எப்படிச் சிக்கினார்கள். அவனுடன் தொடா்புடைய அவனின் கூட்டாளிகள் குறித்தும் நக்கீரன் இதழில் செய்தியாக வெளிவந்தன. மேலும் காசியின் வழக்கை விசாரிக்கும் குமரி மாவட்ட போலீசார் மீது திருப்தி இல்லையென்று பொது மக்களும் மாதா் சங்கங்களும் கருத்து தெரிவித்ததோடு, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக் கேட்டு போராட்டங்களும் நடத்தினார்கள்.

Advertisment

இந்த நிலையில் இன்று 26-ஆம் தேதி குமரி மாவட்ட மா. கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காசி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும், மாவட்ட போலீசார் விசாரித்தால் குற்றவாளிகள் தப்பி விடுவார்கள், அதனால் சி.பி.ஐ. விசாரணை கேட்டு தடையை மீறி நாகர்கோவில் கலெக்டா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மா.கம்யூனிஸ்ட் மா.செ. செல்லசுவாமி, மாநிலக் குழு உறுப்பினா் முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், மாதா்சங்க மாநிலத் துணை தலைவா் உஷாபாசி, அந்தோணி, கண்ணன், பாசி உட்பட ஏராளமானோரை போலிசார் கைது செய்தனா். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

kasi Nagercoil
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe