Advertisment

இளம் பெண்ணை மிரட்டியதாக காசியின் தந்தை கைது...

Father kasi

Advertisment

பள்ளி, கல்லூரி மாணவிகள், பெரும் செல்வந்தர் வீட்டுப் பெண்கள், குடும்பப் பெண்கள் போன்றோரை நாசப்படுத்திய நாகர்கோவிலைசேர்ந்த சுஜி என்ற காசி பெண் டாக்டர்ஒருவர்கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் போலீசார்காசியை கைது செய்தனர்.

பின்னா் பொதுமக்கள் மற்றும் மாதர்சங்கங்களின் போராட்டங்களை அடுத்து காசியின் பாலியல் வழக்கு சிபிசிஐடி வசம் சென்றது. இதையடுத்து ஏற்கனவே லோக்கல் போலீசரால் கைது செய்யப்பட்ட காசி மற்றும் அவனின் நண்பன் டைசன் ஜினோவோடு சிபிசிஐடி போலீசார் காசியின் கூட்டாளியான கணேசபுரத்தை சோ்ந்த தினேஷையும் கைது செய்தனா். மேலும் காவல்துறையை சோ்ந்த சிலரை விசாரிக்கும்படி, அவா்களுக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சிபிசிஐடி விசாரணையில் இருந்த காசியின் தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டார். காசி மீது புகார் கொடுத்த இளம்பெண்ணை மிரட்டியது, காசிசம்மந்தமான சில ஆவணங்களை அழித்தது தொடர்பாக கைது செய்தனர்.

father kasi Nagercoil
இதையும் படியுங்கள்
Subscribe