Advertisment

மீண்டும் சிக்கிய நாகர்கோவில் காசி

Nagercoil Kashi trapped again

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த காசி, தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்த சம்பவத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான்.அந்த நேரத்தில் தமிழகம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது இந்த சம்பவம்

Advertisment

சிபிசிஐடி போலீசாரல் கைது செய்யப்பட்ட காசிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுமதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் சிறையில் இருக்கும் காசியும் அவரது தந்தையும் கந்துவட்டியில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. காசியும் அவனது தந்தை தங்கபாண்டியனும் வட்டிக்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து 5 லட்சம் ரூபாய் வாங்கியதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. கந்து வட்டி வழக்கில் காசிக்கு மூன்றாண்டு சிறையும், தங்கபாண்டியனுக்கு இரண்டு ஆண்டு சிறையும், இதில் இடைத்தரகராக இருந்தவருக்கு மூன்று ஆண்டுகள் சிறையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளகாசி மீண்டும் இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறையில் இருக்க தீர்ப்பு வழங்கியுள்ளது நாகர்கோவில் நீதிமன்றம்.

CBCID police Prison kasi nagerkovil
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe