பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவிலை சேர்ந்த காசியை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

NAGARKOVIL INCIDENT

கன்னியாகுமரி, நாகர்கோவிலில்சமூகவலைதளத்தில் பெண்களை ஏமாற்றி மோசடி செய்ததாக, நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார்காசியை கைது செய்தனர். விசாரணையில்காசியின்செல்போனில் பல பெண்களுடன் காசிநெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிக்கியதாக கூறப்படும்நிலையில், காசியால்ஏமாற்றப்பட்ட பெண்கள் இருந்தால் புகாரளிக்கலாம் எனபோலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதோடு, ஆபாசமாக படம் எடுத்து ஏமாற்றிய காசியை கைது செய்த போலீஸார்விசாரணையை துரிதப்படுத்தினர்.

Advertisment

இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட காசி மீது பல பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்பொழுது அதிகாரப்பூர்வமாக 2 பெண்கள்புகாரளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், காவல்துறை பரிந்துரையை ஏற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாத்முவடநரேகாசியைகுண்டர் சட்டத்தில் கைது செய்யஉத்தரவு பிறப்பித்துள்ளார்.