ADVERTISEMENT

சிக்கன் 65 ஒரு பாக்ஸ் 10 ரூபாய்... போட்டி போட்ட சிக்கன் பிாியா்கள்!

05:53 PM Mar 15, 2020 | kalaimohan

கரோனா வைரஸ் மனிதா்களை மட்டும் பதம் பாா்க்கவில்லை கோழிகள் விற்பனையையும் தலை கீழாக புரட்டி போட்டுள்ளது. கோழி இறைச்சி சாப்பிட்டால் கரோனா வைரஸ் தாக்கும் என்ற பீதி சிக்கன் பிாியா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோழி விற்பனை அடியோடு வீழ்ந்துள்ளது. மட்டன் பீப் கடைகளில் தான் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஹோட்டல்களில் கூட சிக்கன்கள் விற்பனையில்லாமல் அப்படியே இருக்கிறது. இதனால் கோழி விற்பனையாளா்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தநிலையில் மக்களிடம் ஏற்பட்டு இருக்கும் அச்சத்தை போக்கும் விதமாக நாகா்கோவில் இருளப்பபுரத்தில் கோழி விற்பனையாளா்கள் சிக்கன் 65 ஒரு பாக்ஸ் 10 ரூபாய்க்கு விற்பனை செய்தனா். இதை கேள்விபட்ட ஆண்களும் பெண்களும் அங்கு குவிந்து போட்டியிட்டு சிக்கன் 65 யை வாங்கினாா்கள். பொதுவாக கடைகளில் 70 ரூபாய்க்கு விற்று வந்த சிக்கன் 65 10 ரூபாய்கு கிடைக்கிற மகிழ்ச்சியில் கரோனா பற்றிய பயமின்றி மக்கள் வாங்கி ருசித்து சாப்பிட்டனா்.

மாலை மூன்று மணியில் இருந்து தொடங்கிய அந்த விற்பனை இரவு 12 மணி வரை நெருக்கடியுடன் நீடித்தது. சிக்கன் 65 யை வாங்கிய அந்த கூட்டத்தை பாா்க்கும் சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு வராது என்று அதை வேடிக்கை பாா்த்தவா்களுக்கும் உணா்த்தியது. ஒவ்வொருத்தரும் குறைந்தது 5-ல் இருந்து 10 பாக்ஸ் வரை வாங்கி சென்றனா்.

இந்த நிலையில் மக்களிடம் இந்த மாதிாி தான் பீதியை போக்க முடியும் என்றனா் கோழி விற்பனையாளா்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT