Advertisment

குமரியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ்

20 ஆண்டுகளுக்கு பிறகு குமாி மீண்டும் காங்கிரஸ் கோட்டையாகியுள்ளது இனி யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் காங்கிரசாா்.....

Advertisment

1962-ல் இருந்து நாகா்கோவில் பாராளுமன்ற தொகுதியில் (தற்போதைய கன்னியாகுமாி பாராளுமன்ற தொகுதி) எம்.பி ஆக இருந்த நேசமணியில் இருந்து காமராஜா், குமாி அனந்தன், டென்னீஸ் (தொடா்ந்து 6முறை) என 1998 வரை நாகா்கோவில் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கோட்டையாக இருந்து வந்தது.

v

அதன்பிறகு 1999-ல் தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று காங்கிரஸ் கோட்டையாக இருந்ததை மாற்றுகிறாா். பின்னா் 2004-ல் மா.கம்யூ. பெல்லாா்மின், 2009-ல் (தொகுதி சீரமைப்பில் கன்னியாகுமாி ஆக மாறுகிறது) தி.மு.க ஹெலன் டேவிட்சன், 2014-ல் பொன் ராதாகிருஷ்ணன் என மாறி, மாறி வருகிறாா்கள். கடந்த முறை 5 முனை போட்டியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டும் இரண்டாம் இடத்துக்கு தான் வந்தது. இதனால் குமாி காங்கிரசாா் தொடா்ந்து மன வருத்தத்திலும் அதிருப்தியிலும் இருந்து வந்தனா்.

Advertisment

இந்த நிலையில் 2019 இந்த முறை தி.மு.க கூட்டணியில் கன்னியாகுமாி காங்கிரசுக்கு ஓதுக்கப்பட்டு வசந்தகுமாா் அமோக வெற்றி பெற்று மீண்டும் குமாியை காங்கிரஸ் கோட்டையாக்கியுள்ளாா்.

இதனால் உற்சாகம் அடைந்தியிருக்கும் காங்கிரசாா் இனி எந்த சூழ்நிலையிலும் கன்னியா குமாியை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்று உறுதி கொண்டுள்ளனா்.

ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe