Skip to main content

நாகா்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக உயா்த்தப்படுவதற்கு பல்வேறு ஊராட்சி கிராமங்கள் எதிர்ப்பு!!! 

Published on 14/02/2019 | Edited on 14/02/2019


 

nagarcoil



கடந்த ஆண்டு செப்டம்பா் 22-ம் தேதி நாகா்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆா் நூற்றாண்டு விழாவில் நாகா்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தபடும் என்று முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி நேற்று சட்டசபையில் அதற்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி 14 ஆவது மாநகராட்சியாக நாகா்கோவில் நகராட்சியை தரம் உயா்த்தப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் குறிப்பாக ஓரு மாநகராட்சி என்றால் 10-ல் இருந்து 12 லட்சம் மக்கள் இருக்க வேண்டும். ஆனால் அந்தளவு மக்கள் தொகை நாகா்கோவில் நகராட்சியில் இல்லை. இதனால் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக நாகா்கோவிலை சுற்றியுள்ள கிராம ஊராட்சிகள்  இணைக்கபடவுள்ளன.  
 

அதன்படி மணக்குடி, மேலசங்கரன் குழி, நல்லூா், திருப்பதிசாரம், தேரேக்கால் புதூா், இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், கணியாகுளம், பீமநகரி, பறக்கை, புத்தேரி, எள்ளுவிளை, மேலகிருஷ்ணன் புதூா், கேசவன்புத்தனதுறை, பள்ளம்துறை, தா்மபுரம், ராஜாக்கமங்கலம் துறை, ஆத்திகாட்டு விளை ஆகிய 18 ஊராட்சிகள் இணைக்கபட உள்ளன. 
 

இந்த ஊராட்சியை சோ்ந்த மக்கள், நிம்மதியாக கிராம வாழ்க்கையை வாழ்ந்த எங்களால் ஒரேயடியாக மாநகராட்சியோடு ஒன்றி அந்த வாழ்க்கையை வாழ முடியாது. எதற்கெடுத்தாலும் அங்கு வரி செலுத்த வேண்டிய  நிலை. சாக்கடைகள் இல்லாமலும் குப்பைகள் இல்லாமலும் வாழும் நாங்கள் இனி பாதாள சாக்கடைக்கும், குப்பைகளுக்கும் வரி செலுத்த வேண்டும். ஓல வீடு, ஓடு வீடுகளில் வசிக்கும் நாங்கள் மாடி வீடுகளுக்கு உயா்ந்தது போல் வரி செலுத்த வேண்டும். இதனால் எங்களுக்கு மாநகராட்சி வாழ்க்கை தேவையில்லை என்கின்றனா். ஆனால் அரசியில் கட்சியினரும் நகர வாசியினரும் மாநகராட்சியை வரவேற்று இருக்கிறார்கள். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கனல் கண்ணனால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு; வாக்குவாதத்தில் இந்து முன்னணி

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Kanal Kannan in nagarkovil S.P. office;

 

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி அமைப்பில் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிநாட்டு கிறிஸ்தவ மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதனுடன் சில கருத்துகளையும் பதிவிட்டிருந்தார்.

 

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஜோசப் பெனடிக் என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மனுவில், கனல் கண்ணன் கிறிஸ்துவ மதத்தை அவமதித்தாகக் கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்நிலையில் இன்று காலை நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்திற்கு கனல் கண்ணன் விசாரணைக்காக வந்திருந்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 1 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கனல் கண்ணன் எஸ்.பி அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல முயன்றார். அவரைத் தடுத்த காவல்துறையினர், விசாரணை முடியும் வரை எங்கும் செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

 

அப்போது, எஸ்.பி அலுவலகத்தின் வெளியே இருந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கனல் கண்ணன் தனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், விசாரணை முடியும் முன் வெளியே செல்ல அனுமதி கிடையாது என கண்டிப்பு காட்டிய காவல்துறை, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. 

 

 

Next Story

பரோட்டா கடை உரிமையாளர் தற்கொலை; பாஜக நிர்வாகி கைது

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

 Parotta shop owner issue; BJP leader arrested

 

நாகையில் பரோட்டா கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்கொலைக்குத் தூண்டியதாக பாஜக நிர்வாகி ரமேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

 

நாகர்கோவில் மாவட்டம் இருளப்புரம் பகுதியில் உள்ள அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன் (35). இவர் அந்த பகுதியில் பரோட்டா கடை நடத்தி வந்த நிலையில் நேற்று அவருடைய ஹோட்டலில் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த சுசீந்திரம் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் ராதாகிருஷ்ணனின் தாயார் சுசீந்திரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் எனக்கு ஐந்து மகள்கள் ஒரே ஒரு மகன் அவர் ராதாகிருஷ்ணன். 5 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்த ராதாகிருஷ்ணன் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். தொடர்ந்து கடனாளியாக இருந்த எனது மகன் குடும்ப சொத்தை விற்க முயன்றார். ஆனால் எனது கணவரின் உறவினர்கள் சொத்தை விற்க முடியாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தொடர்ந்து அவர்கள் கொடுத்த தொல்லையால் என் மகன் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில்  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடத்தியதில் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது. அந்த கடிதத்தில் 'தனது சாவுக்கு பாஜக நிர்வாகியான ரமேஷ், பாலாஜி, பாஸ்கர், கண்ணன் ஆகிய ஐந்து பேரே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவின் ராஜாமங்கலம் கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.