Advertisment

அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை... அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம்!

நாகர்கோவில் வடசரி பரதர் தெருவில் 1994- ஆம் ஆண்டு எம்ஜிஆரின்மார்பளவு சிலை திறக்கப்பட்டு அதுஅந்தப் பகுதி அதிமுகவினரால் பராமரிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென்று அந்த எம்ஜிஆர் சிலை அருகில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை வைத்து மாலை அணிவித்து இருந்தனர். இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்களுக்கு இச்சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது காட்டுத்தீ போல் நாகர்கோவில் நகரம் முமுவதும் பரவியது.

Advertisment

nagar koil jayalalitha statue nagar koil admk and govt offivers

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை வருவாய் அதிகாரிகளிடமிருந்து முறைப்படி அனுமதி பெறாமல் வைத்ததால், காவல் துறையினருடன் வந்த ஆர்டிஓ அதிகாரி மயில், தாசில்தாா் அப்துல் மன்னா, மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் அங்கு வந்து சிலையை அப்புறபடுத்த அதிமுக பொறுப்பாளர் சகாயராஜிடம் கூறினார்கள். அதற்கு சகாயராஜ் முடியவே முடியாது எம்ஜிஆர் சிலைக்கு அனுமதி வாங்கிய இடத்தில் தான் ஜெயலலிதா சிலை வைத்து இருக்கிறோம். வேறு இடத்தில் வைத்து இருந்தால் தான் அனுமதி வாங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்கு வாதம் செய்தார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஆனால் அதிகாரிகளோ அனுமதி வாங்காமல் வைக்கபட்டிருக்கும் சிலையை அப்புறப்படுத்தியே தான் தீர வேண்டும். அது யாருடைய சிலையாக இருந்தாலும் எனக் கூறி சிலையை அப்புறப்படுத்தும் முயற்சியில்ஈடுபட்டனர்.

nagar koil jayalalitha statue nagar koil admk and govt offivers

அப்போது அங்கு வந்த அதிமுக மாவட்டச் செயலாளர் அசோகன், ஜெயலலிதா சிலைக்கு மாலை போட்டு விட்டுசிலையை மாற்றினால் அதிகாரிகளும் உடனே மாற்றப்படுவார்கள். எங்க ஆட்சியில் எங்க தலைவியின் சிலையை வைக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது என்றார். ஆனாலும் அதைப்பொருட்படுத்தாத அதிகாரிகள் அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நீங்க சிலை வைக்க முறைப்படி அனுமதி கேளுங்கள் அதற்கு அனுமதி தருகிறோம். அதன் பிறகு சிலை வையுங்கள் எனக் கூறி சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

உடனே அதிமுகவினா் நாங்களே அந்தச் சிலையை வைத்திருக்கிறோம் எனக் கூறி சிலையை வாங்கி சென்றனா். அப்போது அதிமுகவினர் ஜெயலலிதா சிலையைத் தூக்கி வீசியது போல் அந்த அதிகாாிகளையும் சீக்கிரமாக தூக்கி வீசுவோம் என ஆவேசத்துடன் கூறினார்கள். இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

FORMER CM JAYALALITHA government nagarkovil staute
இதையும் படியுங்கள்
Subscribe