16 வயது சிறுமி கர்ப்பம்; வாலிபர் போக்சோவில் கைது

nagapattinam young man arrested pocso act

நாகை அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாகை மாவட்டம் கலசம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி நாகையில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (24 ) என்கிற வாலிபர் சம்பந்தப்பட்ட பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ள சிறுமி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

arrested Nagapattinam
இதையும் படியுங்கள்
Subscribe