Skip to main content

மயானத்துக்குப் பாதை இல்லாமல் வயல்களில் உடலைச் சுமந்து செல்லும் அவலம்

 

nagapattinam thirukuvalai muthurasapuram incident

 

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள முத்தரசபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த ஊரைச் சேர்ந்த  விஜயகுமார் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சேரும் சகதியுமான நெற்பயிரை நடவு செய்த வயல்களுக்கு நடுவே தூக்கி சென்றனர்.

 

அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறுகையில், "பல வருடங்களாக இந்த துயரத்தை சந்தித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் யாராவது உயிரிழந்தால் ஒவ்வொரு முறையும் வயலில் தூக்கிச் செல்லும் போது பாடுபட்டு வளர்த்த நெற்பயிர்கள் நாசமாகிறது. மழை காலங்களில் இடுப்பளவு தண்ணீரில் தான் சடலத்தை தூக்கிச் செல்லும் நிலை ஏற்படும். சுடுகாட்டில் நிரந்தர எரியூட்டும் கட்டிடம் கூட இல்லாமலும் கீற்று கொட்டகைகள் அவ்வப்போது அமைத்தும் சடலங்களை எரி ஊட்டுகிறோம். பல நேரங்களில் மழையினால் நனைந்து சடலங்கள் பாதியிலேயே எரிந்து நின்று விடும், அதை நாய்,நரிகள் இழுத்துச் சென்றுவிடும், அதை கண்டுபிடித்து மறு சடங்குகள் செய்யும் துர்பாக்கிய நிலை பலநேரம் நடந்துள்ளது.

 

பல ஆண்டுகளாக புகார் கொடுத்தும் நாகை மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களின் நிலை அறிந்து சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தர வேண்டும்" என வேதனையுடன் கூறுகிறார்கள். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !