அ

Advertisment

பள்ளிவேன் சக்கரத்தில் சிக்கி தனியார் பள்ளி மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. ஆத்திரமடைந்த உறவினர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள இளந்தோப்பு நடராஜபுரம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன். அவரது மகன் விஷ்ணு 5 வயதுடைய சிறுவன். அருகில் உள்ள பட்டவர்த்தி தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி ஒன்றில் யு.கே.ஜி. படித்து வந்தார்.

saa

Advertisment

இந்தநிலையில் சனிக்கிழமை பள்ளி ஆண்டு விழாவிற்காக பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் வேனில் இருந்து மாணவர் விஷ்ணு இறங்குவதை கவனிக்காமல் டிரைவர் வேனை எடுத்ததால் தடுமாறி விழுந்த விஷ்ணு வேன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். தகவல் அறிந்த மணல்மேடு போலீசார் அங்கு சென்று இறந்த குழந்தை விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேன் ஓட்டுநர் உதயசங்கர்(30) என்பவரை கைது செய்து, அவர் ஓட்டிச் சென்ற வேனையும் சிறைபிடித்தனர்.

குழந்தை விஷ்னு இறந்த தகவல் அறிந்த கோவிந்தராஜனின் உறவினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த விஷ்ணுவின் உடல் பிரேத பரிசோதனை செய்ய தாமதப்படுத்தியதால் மேலும் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு வந்து சுமார் 1மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பள்ளியின் தாளாளரை கைது செய்யவும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினரை தவிர வேறு அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தாததால் மேலும் ஆத்திடமடைந்தனர். மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியலை தொடர்ந்தனர்.

Advertisment

இதனால் அப்பகுதியில் மேலும் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.பின்னர் மயிலாடுதுறை தனி தாசில்தார் திருமாறன் மற்றும் காவல் ஆய்வாளர் டில்லிபாபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.