/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nagapattinam-school-art.jpg)
நாகப்பட்டினம் மாவட்டம் வலிவலம் அடுத்துள்ள பெரிய காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மகன் கவிப்பிரியன் வலிவலம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரதுதனது வகுப்பு மாணவர்களுடன் விளையாட்டு வகுப்பில் பள்ளி மைதானத்தை சுற்றி ஓடி வந்துள்ளனர். மூன்றாவது சுற்று ஓடிவந்த போது கவிப்பிரியன் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக ஆசிரியர்கள் மயங்கி விழுந்த மாணவனை வலிவலம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்து முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வலிவலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)