Advertisment

ரவுடி படுகொலை; போலீசார் தீவிர விசாரணை

nagapattinam district incident police sp investigation started

Advertisment

நாகை மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடம்பங்குடி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேல். இன்று காலை ஓர்க்குடி சிற்றாற்று பாலம் அருகே காலைக்கடன் கழிக்க சென்ற அவரை வழிமறித்த மர்ம கும்பல் தலையில் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சிங்காரவேலன் கடந்த ஆண்டு தனது மனைவியைக் கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்து 1 மாதமே ஆன நிலையில், வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். மாவட்ட எஸ்.பி. சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.சிங்காரவேல் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில்உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதிமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Nagapattinam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe