
நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் நிம்மேலி கிராமம் ஆர். அறிவழகன் வளர்த்த மாடு விலை ரூ 90 ஆயிரம் மதிப்புள்ள காளைகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சொந்த ஊரில் மாட்டுப் பொங்களை கொண்டாடியுள்ளார்.

அதாவது.. நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் 18.06.2018 அன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தல் தொடர்பாக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. அந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அதிமுக நாகை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஓ.எஸ். மணியன் நினைவு பரிசாக ஏர் கலப்பையுடன் கூடிய உம்பளச்சேரி காளைகளை முதலமைச்சருக்கு பரிசாக வழங்கினார்.

இந்த நிலையில் இந்த பொங்கலை முன்னிட்டு காளைகளுக்கு மாட்டுப் பொங்கல் நாளான நேற்று சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் சொந்த கிராமத்தில் முதலமைச்சர் அக்காளைகளுக்கு பழங்கள் வழங்கி, பொங்கல் கொண்டாடினார்.

Follow Us