Advertisment

பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் குழாய்களுக்கு தீ- இருவர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு சுத்தகரிக்கப்படும் பெட்ரோல், டீசல், ஆயில் உள்ளிட்ட எரிபொருட்களை மாற்று இடங்களுக்கு கொண்டு செல்ல டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் எண்ணெய் நிறுவனத்திற்கு கூடுதல் செலவும், காலவிரயமும் ஏற்படுவதாக கூறி எண்ணெய் நிறுவனம், பூமிக்கடியில் குழாய் பதித்து எண்ணெய் பொருட்கள் கொண்டு செல்ல முடிவு செய்தது.

Advertisment

f

இதற்காக நாகை மாவட்டத்திலிருந்து திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குவரை பூமிக்கடியில் இரும்பு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்ற வருகிறது. இதற்கான பணிகள் நாகை மாவட்டங்களில் தொடங்கியுள்ள நிலையில் விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்கப்படுவதற்கு, நாகை மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அருந்தவபுரத்தில பூமிக்கடியில் குழாய் பதிக்க குழாய்கள் கொண்டு வந்து வயல் பகுதியில் இறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் விளை நிலங்களில் குழாய் பதிக்ககூடாது என அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் வயல்களில் கிடந்த குழாய்களுக்கு தீ வைத்துள்ளனர். குழாய்களின் ரசாயான பூச்சுக்கள் இருந்ததால் அவை தீப்பிடித்து எரிந்தது. குழாய்கள் தேசம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் குழாய்களுக்கு தீ வைத்ததாக அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரெங்சாமி (60), உக்கடம் கிராமத்தைச் செர்ந்த மணிகண்டன் (29) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விவசாயிகளை கைது பெட்ரோலிய குழாய்களை பதித்து விளை நிலங்களை நாசமாக்க வேண்டாம் என்று போராடினாலும் வழக்கு கைது, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் விளை நிலங்களை நாசமாக்கும் ஹைட்ரோ கார்ப்பன், பெட்ரோல் பொருட்களை கொண்டு செல்லும் குழாய்களை சேதப்படுத்தினாலும் வழக்கு, கைது. இப்படி விவசாயிகள் மீது மட்டுமே காவல் துறை நடவடிக்கை எடுப்பதை நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் போராட்டங்கள் வலுவடையும் என்கின்றனர்.

Nagapattinam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe