Advertisment

புயலுக்கு சாய்ந்த நாகலிங்கம் பூ மரத்தை மீண்டும் நட்ட மக்கள் !!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கமல், கொத்தமங்கமல், சேந்தன்குடி, நகரம், வடகாடு, மாங்காடு, குளமங்கலம், பனங்குளம், புள்ளாண்விடுதி, நெடுவாசல் உள்ளிட்ட பல சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டு மரங்கள் வேரோடு சாய்ந்தது. இந்த நிலையில் சாய்ந்த மரங்களை தோட்டங்களில் இருந்து வெட்டி அகற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் சில விவசாயிகள் சிறிய மரக்கன்றுகளை மீண்டும் இழுத்து நிறுத்தி வருகின்றனர். செரியலூர், கீரமங்கலம் போன்ற பகுதிகளிலும் அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் சில கிராமங்களிலும் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் சாய்ந்த தென்னை மரங்களை பொக்கலின் இயந்திரம் மூலம் மறு நடவு செய்து வருகின்றனர்.

Advertisment

Nagalingam leaning to the storm was the people who again Planting the flower tree

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அதேபோல பல இடங்களிலும் பல பழமையான மரங்களை இயந்திரங்கள் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் பள்ளிகள், விழாக்களிலும் மரக்கன்றுகளை நட்டு விழா தொடங்கி பல லட்ச மரக்கன்றுகளை வளர்ந்து வந்த மரம் தங்கச்சாமியின் தோட்டத்தில் சாய்ந்து கிடந்த நாகலிங்கம் பூ மரத்தை மாட்டு வண்டியில் ஏற்றி ஒரு கி.மீ தூரத்தில் உள்ள பிடாரி அம்மன் கோயில் வளாகத்தில் விவசாயிகள் நட்டனர்.

இது குறித்து மரம் தங்க.கண்ணன் கூறும் போது..

Nagalingam leaning to the storm was the people who again Planting the flower tree

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தலைவர்கள் நினைவாக வைக்கப்பட்ட மரங்கள் முதல் தோட்டத்தில் இருந்த அத்தனை மரங்களும் கஜா புயலில் சாய்ந்துவிட்டது. அதில் மீண்டும் துளிர்க்கும் மரங்களை மறுநடவு செய்து வருகிறோம். அந்த வகையில் தான் நாகலிங்கம் மரத்தை பிடாரி அம்மன் கோயில் வளாகத்தில் நட்டோம். அதாவது ஆலமரம், அரசமரம், பூவரசு, போன்ற மரங்களின் கிளைகளை நடவு செய்தால் வேகமாக வளரும். ஆதற்காக தான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கணேஷ் மரக்கன்றுகளை வைத்து வளர்ப்பது போல மரக்கிளைகளை நட்டு வளருங்கள் என்று ஒவ்வொரு கிராமத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பினார். அதன்படி பல அனைத்து கிராமங்களிலும் மரக்கிளைகள் நடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மரத்தையே மறுபடியும் நட்டிருக்கிறோம் என்றார்.

former kaja cyclone tree villagers
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe