/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mksa323211_0.jpg)
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிதெரிவித்து நாகாலாந்து முதலமைச்சர் நிஃபியு ரியோ கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாகாலாந்தில் இருந்து மருத்துவச் சிகிச்சைக்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள் தங்கும் வகையில் விருந்தினர் இல்லம் அமைப்பதற்காக ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ராபாக்கம் கிராமத்தில் 10,000 சதுர அடி நிலத்தினை நாகாலாந்து அரசுக்கு இலவசமாக வழங்கியதற்கு நன்றி தெரிவித்து நாகாலாந்து முதலமைச்சர் நிஃபியு ரியோ, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இது மருத்துவ வசதி பெறுவதற்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டை சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)