குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களை நேரில் அழைத்து குழந்தைகளோடு குதுகலமாக குழந்தைகள் தினத்தை கொண்டாடி அசத்தியிருக்கிறார் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

Advertisment

Nagai SP celebrates Children's Day

நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறை சார்பில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் ஐபிஎஸ்.குழந்தைகள், பள்ளி மாணவர்களை நேரில் அழைத்து குதுகலமாக பேசி வாழ்த்துக்களையும்,வழங்கி தென்னமரக்கன்றுகள் மற்றும் பழங்களை கொடுத்து மகிழ்ந்துள்ளார். அதோடு குழந்தைகள் தினத்தின் முக்கியத்துவம் குறித்தும்,குழந்தைபருவ கல்வியை நன்கு கற்கவேண்டும் என்றும் கைப்பேசி பயன்படுத்த கூடாது என்றும் நேரத்தை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்ளுதல் வேண்டும் என்றும் ,"குழந்தைகள் மத்தியில் அறிவுரைகள் வழங்கினார்.

இதனை குழந்தைகள் ஆர்வமுடன் கேட்டு மகிழந்தனர்.பின்னர் குழந்தைகளோடு குழுவாக புகைப்படம் எடுத்துகொண்டார். இதனால் பள்ளி மாணவர்களும், குழந்தைகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisment

Nagai SP celebrates Children's Day

நாகை மாவட்ட எஸ்.பியாக வந்த ஒரு சில நாட்களிலேயே பல ஆக்கப்பூர்வமான மாற்றங்களை செய்து குற்றபின்னணிஉள்ளவர்களுக்கு அதிர்ச்சியையும், சாமானியர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளார். அந்த அதிரடியில், "எந்த நேரத்திலும், எந்த பிரச்சனையாக இருந்தாலும் என்னுடைய செல்போனில் அழைத்து கூறலாம், பேசலாம் என்று கூறியிருக்கிறார். அடுத்த நாளே முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் புகார் அளிக்கவோ என்னை பார்க்கவோ என் இருக்கை தேடிவரவேண்டாம், நானே கீழிறங்கி வந்து பார்ப்பேன் என்று அறிவித்தார். அதன்படியே வயதானவர்களை வந்து பார்த்தும், குறைகளை கேட்டும் வருகிறார். அந்தவகையில் குழந்தைகளை அழைத்து ஊக்கப்படுத்தியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.