
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்று திரும்பிய சசிகலாவை ஆதரித்து தமிழகம் முழுவதும் அதிமுகவை சேர்ந்த சிலர் சுவரொட்டிகளை ஒட்டி வருவதும், அவர்களை இனம்கண்டு அதிமுகவில் இருந்து நீக்குவதும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாகூர் அதிமுக நகரச் செயலாளரான செய்யது மீரான் என்பவரின் புகைப்படத்துடன் சசிகலாவை வரவேற்றும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை, நாகை, நாகூர் உள்ளிட்ட பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் விவகாரம் அதிமுகவினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் போஸ்டர் விவகாரம் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவத் துவங்கியதும் அதிர்ச்சியான செய்யது மீரான் நாகை எஸ்பி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் ''சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்ட சுவரொட்டிக்கும், தமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, எனது பெயருக்கும், அதிமுக கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் தமக்குத் தெரியாமல் சிலர் சதி வேலை செய்கின்றனர்."என கூறியிருக்கிறார்.
சசிகலாவை வரவேற்று அதிமுக நாகூர் அதிமுக நகரச் செயலாளர் பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.