Skip to main content

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி கருவை கலைத்து ஏமாற்றிய சப்- இன்ஸ்பெக்டர்!

மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தைச்சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி, கருவை கலைக்க வைத்ததோடு, இதை வெளியில் சொன்னால் குடும்பத்தோடு வெட்டி சாய்த்து விடுவேன். உனது குடும்பத்தையே சீரழித்துவிடுவேன் என அந்த பெண்ணை மிரட்டும் காவல்துறை உதவி ஆய்வாளரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

nagai police sub inspector women connection issue complaint not accept in police

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் சுபஸ்ரீ. தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தற்போது திட்டச்சேரியில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் தலைஞாயிறு ஓரடியம்புலத்தை சேர்ந்த விவேக் ரவிராஜ் என்பவருக்கும் மணல்மேடு காவல்நிலையத்தில் பணியில் இருக்கும் போது முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு, பிறகு காதலாக மாறி கல்யாணமாகமலேயே குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். 

nagai police sub inspector women connection issue complaint not accept in police

அதோடு இருவரும் தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். அதன் விளைவாக சுபஸ்ரீ கர்ப்பமானார். இதனை சுபஸ்ரீ சப் இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ்யிடம் கூறவே, அதிர்ச்சியடைந்த விவேக் ரவிராஜ், அந்த கர்ப்ப விவகாரத்திலிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணி பல வழிகளில் முடிவு செய்தார். சுபஸ்ரீயிடம் "ஒரு வருடம் கழித்து திருமணம் செய்துகொள்வோம், கல்யாணம் செய்து கொள்ளாமல் கர்ப்பமாகி குழந்தை பிறந்தால் உனக்கும் அவப்பெயர், எனக்கும் பிரச்சனை, இருவரும் ஈருடல் ஓருயிறாக கலந்துவிட்டோம், இனி உன்னை ஏமாற்ற மாட்டேன், என்னை நம்பு என்று கூறி கருவை கலைத்து விடுமாறு வற்புறுத்தியுள்ளார். அதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று  மருத்துவர் மூலம் கருக்கலைப்பும் செய்துள்ளார். 
 

nagai police sub inspector women connection issue complaint not accept in police


 

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல சுகத்தை அனுபவித்து கைகழுவிய சப் இன்ஸ்பெக்டர், நாளடைவில் சுபஸ்ரீயிடம் பேசுவதை தவிர்த்துள்ளார், இதில் சந்தேகம் அடைந்த சுபஸ்ரீ "என்னை உடனடியாக திருமணம் செய்து கொள் இல்லை என்றால் செத்து விடுவேன்" என கெஞ்சியுள்ளார். இதற்கு கொஞ்சமும் இரக்கம் காட்டாத, அந்த காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் தான் மக்களை பாதுகாக்கும் காவல்துறையில் இருப்பதையும், அதன் கவுரவத்தையும் குப்பையில் போட்டுவிட்டு, இனிமேல் என்னிடம் பேசினாலோ, இச்சம்பவத்தை வெளியில் கூறினாளோ, உன்னையும் உன் குடும்பத்தாரையும் கொன்று புதைத்து விடுவேன், இதனால் பத்து தலை விழுந்தாலும், நான் ஜெயிலுக்கு போனாலும் தயங்க மாட்டேன். உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது, நீ என்ன வேனும்னாலும் பன்னிக்கோ" என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

nagai police sub inspector women connection issue complaint not accept in police

மேலும் அந்த ஆடியோவில், திருமணம் செய்து கொள்ளும்படி கதறி அழும் அந்த இளம்பெண் சுபஶ்ரீயையும் அவரது குடும்பத்தையும் கொச்சையான, அறுவறுக்கத்தக்க வார்த்தைகளாலும், ஆபாச வார்த்தைகளால் ஒருமையில் பேசி மிரட்டல் விடுக்கிறார். அந்த ஆடியோக்களில் அடுத்ததுடுத்து சப்- இன்ஸ்பெக்டர் பேசிய வார்த்தைகள் காவல்துறையை தாண்டி பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 
 

உதவி ஆய்வாளரின் பேச்சைக்கேட்டு பயந்துபோன அந்த இளம்பெண் சுபஸ்ரீ, நாகை, மயிலாடுதுறை, சென்னை என ஏறாத காவல்துறை அலுவலகங்களே இல்லை. தன்னை கர்ப்பமாக்கி, கொலை மிரட்டல் விடுத்த திட்டச்சேரி சப்- இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கெஞ்சி மண்டியிடாத காவல்துறை அதிகாரிகளே இல்லை. ஒவ்வொரு இடத்திலும் நான் யாரு தெரியுமா, அமைச்சர் ஓ,எஸ்,மணியனின் உறவுக்காரன், என தனது செல்வாக்கை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்காமல் தடுத்து வருகிறார்.அதோடு மயிலாடுதுறை அதிமுக முக்கிய புள்ளிகளின் உதவியோடு ரவுடிகள் சிலரை சுபஸ்ரீ வீட்டிற்கு அனுப்பி வைத்து, கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டவும் செய்துள்ளார்.
 

nagai police sub inspector women connection issue complaint not accept in police


 

இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தோம், மேலே உள்ள அத்துனைக்கும் ஆடியோ, போட்டோ ஆதாங்களை நம்மிடம் கொடுத்தவர். தன்னை காதலித்து ஏமாற்றியதோடு, சட்டத்திற்கு விரோதமாக கருவை கலைத்தும்,கொலை மிரட்டல் விடுத்துள்ளதற்கும் பத்துக்கும் அதிகமான ஆடியோ ஆதாரங்ளை கொடுத்தப்பிறகும் உதவி ஆய்வாளர் விவேக் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கவில்லை," என கலங்குகிறார். இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் விவேக்கை விளக்கம் கேட்க தொடர்பு கொண்டோம். ஆனால் அவரது செல்போன் 'ஸ்விட்ச் ஆப்பில்' இருந்ததாக கூறுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்