Advertisment

அரசு பேருந்தும் மீன் லாரியும் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி, 2O பேர் படுகாயம்!

nagai incident

Advertisment

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து புதன்கிழமை (07.04.2021) இரவு அரசுப் போக்குவரத்துக் கழக சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 2 மணியளவில், பேருந்து ஆலப்பாக்கம் அருகே உள்ளமேட்டுப்பாளையம் கிராமத்தை நோக்கிச் சென்றபோது, எதிரே கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த மீன் லாரி எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

nagai

நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பேருந்தை ஓட்டி வந்ததிருக்கோவிலூர் அருகேதிருப்பாலபந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 42),பேருந்தில் பயணம் செய்த நாகப்பட்டினம் அன்பரசன் (வயது 34),வைரவன் (வயது 20) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காககடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

மேலும், படுகாயமடைந்த 20 பயணிகளில் 16 பயணிகள் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 4 பயணிகள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

govt bus accident nagai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe