Skip to main content

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தைபோல் இளம்பெண்களை படமெடுத்து மிரட்டிய நாகை இளைஞர்!

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

தமிழகத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் அடங்குவதற்குள், நாகை இளைஞர் ஒருவர் இளம் பெண்களை புகைப்படம் எடுத்து வைரல் ஆக்கிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

 Nagai district youth who sexual abuse young girl like Pollachi's sex case

 

நாகை வெளிப் பாளையத்தை அடுத்துள்ள பேட்டை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் 23 வயதேயான சுந்தர் சென்னையில் கார் டிரைவராக இருந்துகொண்டு பல பெண்களோடு நெருக்கமாக பழகி, நெருக்கமாக புகைப்படங்களை எடுத்து, தனது ஆசைக்கு இணங்க வைத்திருக்கிறான். அவனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்ததன் பெயரில் வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டிருக்கிறான்.

 

 

இது குறித்து விசாரித்தோம், " நாகப்பட்டினம் அருகே உள்ள ஆழியூர் தெற்கு தெருவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் நாகையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். சுந்தர் அந்தக் கடைக்கு  அடிக்கடி ரீச்சார்ஜ் செய்வதுபோல் வந்துசென்றிருக்கிறான். அந்த வருகை சுந்தருக்கும், இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அந்த பழக்கம் வாலிபக்கோலாறால் இவரும் காதலர்களாக மாறி உல்லாசமாக திரியவும் வைத்திருக்கிறது.

 

 Nagai district youth who sexual abuse young girl like Pollachi's sex case

 

ஒரு வருடமாக நீடித்த உல்லாச காதல், திடீரென்று விரிசல் ஏற்பட்டது. சுந்தரின் நடவடிக்கையில் அந்த இளம்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுந்தர் பல பெண்களோடு பழக்கம் வைத்திருப்பதை தெரிந்துகொண்டு விலகியிருக்கிறார் அந்த இளம்பெண். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர் அந்த இளம்பெண்ணை மீண்டும் மீண்டும் தன்னுடன் பழகவும், இச்சைக்கு இணங்கவும் வற்புறுத்தியிருக்கிறான்.  ஆனால் அந்த இளம்பெண் தொடரந்து மறுத்திருக்கிறார். கோபமான சுந்தர் ஒரு திட்டம் தீட்டுகிறான், மீண்டும் உண்மையான காதலனைப்போல நடிக்கிறான்.  காதலியான அந்த இளம் பெண்ணை சந்தித்து சாமர்த்தியமாக பேசி தனது போலியான காதலை மீண்டும் நீடிக்க செய்கிறான். நாளடைவில் அந்த இளம்பெண்ணின் நம்பிக்கைக்கு உரியவனாக மாறுவதுபோல் நடித்துள்ளான்.

 

 Nagai district youth who sexual abuse young girl like Pollachi's sex case

 

இந்த நிலையில் காதலியிடம் தனக்கு நேரம் காலம் சரியில்லை நாம் காரைக்கால் கோவிலுக்கு சென்று வருவோம், அமைதிக்கிடைக்கும் என்று கூறி அழைத்துள்ளான். அந்த இளம்பெண்ணுக்கு காதல் கண்ணை மறைத்தது, அவன் மீது மீண்டும் நம்பிக்கை பிறந்து சுந்தரோடு காரைக்கால் செல்கிறார். காரைக்கால் பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்ற சுந்தர் அங்கு ஒரு கடையில் குளிர்பானம் வாங்கி மயக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளான். இதையடுத்து மயக்க நிலையில் இருந்த அந்த இளம்பெண்ணை ஒரு மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்று ஆடைகளை கலைத்து,  தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்திருக்கிறான். மயக்கம் தெளிந்ததும் இருவரும் ஊர் திரும்பி விட்டனர். இந்த சம்பவத்தால் இளம்பெண் மீண்டும் சுந்தரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். 

 

அதன் பிறகே விவகாரம் பூதாகரம் ஆகிறது. செல்போனில் தெரியாமல் எடுத்த படத்தை காட்டி நீ நான் கூப்பிடும் போதுவரவில்லை எனில் படம் யூடிப், முகநூலில் பரவிடும் என மிறட்டியிருக்கிறான். இதையறிந்து அவமானம் அடைந்த இளம் பெண் உடனடியாக கீழ்வேளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பொள்ளாச்சி வண்கொடுமை விவகாரம் அடங்குவதற்குள், நாகப்பட்டினத்தில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.