Advertisment

கட்டுப்பாடுகளோடு இயங்கும் உணவகங்கள்!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மளிகை கடைகள், மருந்தகம், உணவகங்கள், காய்கறி உள்ளிட்ட கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும், உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

Advertisment

NAGAI DISTRICT Restaurants

இதனிடையே உணவு பொருட்களை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்களான swiggy, zomato உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அறிவித்துள்ளார்.இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் ஒவ்வொரு கடைகளிலும் 3 மீட்டர் இடைவெளி விட்டு 3 மீட்டர் இடைவெளிவிட்டு உணவகங்கள் இயங்கி வருகின்றனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து தமிழக- காரைக்கால் எல்லையான நாகூர், வாஞ்சூர் சோதனை சாவடி மூடப்பட்டு அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை சார்பாக தெருத்தெருவாக கரோனா குறித்த விழிப்புணர்வு தகவலை ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு அவ்வப்போது வழங்கி வருகின்றனர்.

நாகப்பட்டினத்தில் பரவலாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. நாகூரில் பார்சல் விற்பனை மட்டும் கடுமையான விதிகளோடு நடைபெற்று வருகிறது. பரோட்டா விற்பனை செய்யப்படும் கடைகளில் மூன்று மீட்டர் இடைவெளிவிட்டு பொதுமக்கள் நிறுத்திவைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நாகை, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் அடைக்கப்பட்டுள்ளது மருந்தகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

curfew restaurants Nagai district
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe