நாகை மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (22.11.2019) விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாகை, கடலூர், திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் நாகை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில்,நாகூர், தரங்கம்பாடி கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.