Advertisment
நாகையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட 10 வீடுகளுக்கான சாவியை வழங்கினார் ரஜினி. சென்னை போயஸ் கார்டனில் 10 குடும்பத்தைசேர்ந்தஉறுப்பினர்களிடம் நேரில் சாவியை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.அப்போதுநாகை மாவட்ட மன்ற செயலாளர் ராஜேஸ்வரன் உடனிருந்தார்.கஜா புயலால் அதிக பாதிப்பை சந்தித்த கோடியக்கரை மற்றும் தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பேரின் குடும்பத்துக்கு வீடு கட்டி தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.