Skip to main content

நாகை மாவட்டத்தில் அமைச்சர், ஆட்சியர், எஸ்,பி உள்ளிட்டவர்கள் திட்டமிட்டு சட்டத்தை மீறி செயல்படுகின்றனர்; சிபிஎம் கட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டு.

Published on 25/01/2019 | Edited on 25/01/2019


 

cpim

 

 

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் டாஸ்மாக்  கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு  32 நாட்கள் சிறையிலடைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு  பாராட்டு விழாநடைப்பெற்றது.
 

மயிலாடுதுறை  சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடத்தில், திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி நவம்பர் 12 அன்று மார்க்சிஸ்ட் கட்சியினர்  போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை  200 க்கும் மேற்பட்ட  காவலர்கள் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி  1 பெண் உள்ளிட்ட 23 பேரை கைது செய்து 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 
 

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி சிறையிலிருந்து 32 நாட்களுக்கு பிறகு வெளியில் வந்த தோழர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியை மயிலாடுதுறை சத்தியம் மஹாலில் அக்க கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் கீழ்வேளூர் எம்.எல்.ஏ.வுமான நாகை மாலி தலைமையில் நடைப்பெற்றது. சிறை சென்றவர்களின் குடும்பத்தினர் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
 

சிறை சென்றவர்களை பாராட்டிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் , "அரசு மதுபானக் கடைக்கு எதிராக போராடிய 23 தோழர்கள் மீதும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடினார்கள் என வழக்கு பதியாமல் பொய்யான  வழக்கை பதிந்துள்ளனர். மாவட்டத்தின் அமைச்சரான ஓ.எஸ். மணியன், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட அனைவரும் இணைந்து திட்டமிட்டு சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளனர். நீதிமன்றங்கள் உட்பட உழைப்பாளி மக்களுக்கு எதிராகவே தீர்ப்பை எழுதுகின்றன. காவல்துறை செய்ய வேண்டிய வேலையை நீதிமன்றங்கள் செய்வது வேடிக்கையாக உள்ளது. காவல்துறை சொல்வதை அப்படியே நம்பி நீதிபதி செயல்பட்டுள்ளார் அந்த நீதிபதி யோசிக்கவே மாட்டாரா? 
 

பி.எஸ்.தனுஷ்கோடி, ஜீ.வீரய்யன், மணலி கந்தசாமி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களின் வரலாற்றை படித்தால் தெரிந்துக்கொள்ளலாம், சித்ரவதைகளை அனுபவிக்கும் கூடமாக சிறைகள் இருந்தன. அவற்றையெல்லாம் மாற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறைக்குள்ளேயே நடத்திய போராட்டங்களின் விளைவாக தான் சிறைகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மீண்டும் எழுச்சியான போராட்டத்தை நிரந்தரமாக மூடும் வரை நடத்துவோம். காவல்துறை பொய்யாக பதிந்துள்ள வழக்கை திரும்பபெற வேண்டும்."  என பேசிமுடித்தார்.
 

அதனைத் தொடர்ந்து சிறை சென்ற 23 பேருக்கும் பிணையில் விடுதலையானது குறித்து தீக்கதிரில் வெளிவந்த செய்தியினை நினைவு சின்னமாக வடிவமைத்து ஒவ்வொருவருக்கும் வழங்கினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார். 

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.