Advertisment

கட்டுக்குள் கரோனா! நாகையில் தடுப்புகள் அகற்றும் பணி மும்முரம்!

Nagai -corona virus Control

Advertisment

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தடை செய்யப்பட்ட பல்வேறு பகுதிகளின் தடுப்புகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து 45 பேருக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டது. அதில் 44 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், புட்டபர்த்தி சென்று வந்த ஒருவர் மட்டும் தொடர்ந்து சிக்சை பெற்று வருகிறார். அதோடு மேலும் புதிதாக இரண்டு நபர்களுக்கு நோய் தொற்று இருப்பதாக கண்டரியபட்டு தனிமைபடுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளின் தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி நாகை நகராட்சிக்கு உட்பட்ட நாகூரில் தடை செய்யப்பட்ட 20 க்கும் மேற்பட்ட தெருக்களை தகரம் கொண்டு மக்கள் வெளியே செல்லவும், வெளியில் இருந்து உள்ளே செல்லமுடியாத வகையில் முற்றிலும் அடைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் ஒரு மாத காலத்திற்கு பிறகு தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டது. பண்டகசாலை தெரு, தர்ஹா குளம், பங்களா தோட்டம், தலைமாட்டுதெரு உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட தெருக்களில் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டது.

Advertisment

கடந்த ஒரு மாத காலத்திற்கு பிறகு, நாகையில் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தடுப்புகள் அகற்றப்பட்டிருப்பதால்பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

covid 19 corona virus nagai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe