கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பத்தில் ஊராட்சித் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவி ஏலத்தில் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஊரில் உள்ள அனைவரும் ஒன்றுகூடி, இந்த ஏலத்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஏலத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூபாய் 50 லட்சமும், துணை தலைவர் பதவிக்கு ரூபாய் 15 லட்சமும் ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதில் அதிமுக பிரமுகர் சக்திவேல் தலைவர் பதவிக்கான ஏலத்தை எடுத்துள்ளார் என்றும், துணைத்தலைவர் பதவியை தேமுதிக பிரமுகர் முருகன் ஏலத்தில் எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

 nadukkuppam village Panchayat leader's bid? cuddalore District Collector

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (09.12.2019) தொடங்கியது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில், பதவியை ஏலம் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 nadukkuppam village Panchayat leader's bid? cuddalore District Collector

Advertisment

இதனிடையே ஊராட்சித் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.