Skip to main content

நடுக்காட்டுப்பட்டி வந்து சேர்ந்தது மாநில பேரிடர் மீட்புப் படை...

Published on 26/10/2019 | Edited on 26/10/2019

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ-கலாமேரி தம்பதியரின் 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள நிலத்தில் நடந்துசென்றபோது, ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
 

sdrf

 

 

பயன்பாடின்றி இருந்த அந்த ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியிருந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் கீழே இறங்கியதாக தெரிகிறது.

இதனையடுத்து போலீஸார், தீயணைப்பு படை மற்றும் ஐந்து மீட்புக்  குழுக்கள் சிறுவனை மீட்பதற்காக போராடி வந்தனர். சிறுவன் ஆழ்துளாய் கிணற்றில் விழுந்து 17 மணிநேரத்திற்கு மேலாகிவிட்டது. அதிகாலை வரை சிறுவன் சுவாசித்திருப்பது மீட்புக்குழுவுக்கு தெரிந்திருக்கிறது. இதனையடுத்து சிறுவனின் மேல் மணல் சரிந்ததால் மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார். 

தற்போதைய நிலையில் 18 மணிநேரமாக சிறுவன் ஆழ்துளாய் கிணற்றிலேயே இருப்பதனால் சிறுவன் சோர்வுற்ற நிலையில் எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறான். ஊர் மக்களில் தொடங்கி அனைவருமே சிறுவன் பத்திரமாக வெளியே கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள். 

சுர்ஜித்தின் தயார் என் குழந்தை பத்திரமாக வந்துவிடுவான் என்று தீபாவளிக்காக ஆடையை தையில் மெஷினில் தைத்துக்கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அனைவரையும் மனம் உருகச் செய்துள்ளது.

இந்நிலையில் சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணியில் மழை குறுக்கிட்டுள்ளதால் மழைநீர் உள்ளே செல்வதை தடுக்க தார்பாய்கள் கட்டப்பட்டு நடவடிக்கை. 

கமாண்டோ பிரேம் ஆனந்த் தலைமையில் 20 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு பணியை தொடங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.  தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறும்போது, “சிறுவனின் பெயர் மயூர். தனது நண்பர்களுடன் சேர்ந்து அறுவடை செய்த கோதுமை பயிரிடப்பட்ட வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். மற்ற குழந்தைகள் அவருக்கு உதவ முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால்  உடனடியாக மயூருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் 3.30 மணியளவில் ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மீட்புப் பணியில் 2 ஜேசிபிகள், கேமராமேன்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு குழு பனாரஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குழந்தையைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்யும். எம்எல்ஏ சித்தார்த் திவாரி அந்த இடத்தில் இருக்கிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை மீட்பு!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.


ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் 5 வயது குழந்தை தனது வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

rajasthan state sirohi place 5 children deep borewell 15 feet sdrf

குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட, பெற்றோர், உறவினர்கள் இது குறித்து தீயணைப்பு துறை, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மாநில பேரிடர் மீட்பு குழுவினர், குழந்தை 15 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதை கண்டறிந்தனர். பின்பு மாவட்ட ஆட்சியர் சுரேந்திர குமார், மீட்பு குழுவினருடன் குழந்தையை பத்திரமாக மீட்பது குறித்து ஆலோசனை செய்தார். அதனை தொடர்ந்து மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வந்தது.

rajasthan state sirohi place 5 children deep borewell 15 feet sdrf


இந்நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் குழந்தையை உயிருடன் மீட்டது மாநில பேரிடர் மீட்பு குழு. சம்பவ இடத்திற்கு அருகில் ஆம்புலன்ஸ் உடன் காத்திருந்த மருத்துவ குழு குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகிறது. குழந்தையை பத்திரமாக மீட்ட மாநில பேரிடர் குழுவினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் அப்பகுதி மக்கள், குழந்தையின் உறவினர்கள், பெற்றோர் உட்பட அனைவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.