நாளை (31/01/2020) வெளியாகவிருந்த நிலையில், நாடோடிகள்- 2 திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

நடிகர் சசிகுமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள்- 2 திரைப்படத்தை தயாரிப்பாளர் நந்தகுமார் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படம் நாளை ரிலீஸாகவிருந்தது.

nadodigal 2 film financial issues  chennai high court

இந்தப் படத்திற்குத் தடை விதிக்கக்கோரி, எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், நாடோடிகள் படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார், படத் தயாரிப்பு செலவுகளுக்காகத் தன்னை அணுகியபோது, படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை அளிப்பதாகக் கூறி, ரூ.5 கோடியே 25 லட்சத்துக்கு ஒப்பந்தம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பல தவணைகளாக, ரூ.3 கோடியே 50 லட்சத்தை தயாரிப்பாளருக்கு வழங்கிய நிலையில், வேறு நிறுவனம் மூலமாக படத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியிட தயாரிப்பாளர் நந்தகுமார் நடவடிக்கைகள் எடுத்து வருவதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார். ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிட முயற்சிப்பது குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டதற்கு, அவர் மழுப்பலான பதில் அளித்ததாகவும், ஒப்பந்தப்படி மீதமுள்ள ரூ.1 கோடியே 75 லட்சத்தை அளிக்கத் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

nadodigal 2 film financial issues  chennai high court

படத்தின் உரிமை தனக்கே சொந்தமானது என அறிவிக்க வேண்டும். அதுவரையிலும் படத்தை வெளியிடுவதற்கான "கீ டெலிவரி மெசேஜ்" திரையரங்குகளுக்குத் தர "கியூப்"-க்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

Advertisment

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்காக "கீ டெலிவரி மெசேஜ்" தர, கியூப் நிறுவனத்திற்க்குத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனு தொடர்பாக பதில் அளிக்க படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்குத் தள்ளிவைத்தார்.