Advertisment

நாங்குநேரியில் சென்னைகாரருக்கு சீட்... என்ன செய்வது? குழப்பத்தில் நெல்லை காங்கிரசார்...

குமரிஅனந்தன், ஊா்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் என மூன்று போ் கொண்ட பெயா் பட்டியலோடு டெல்லி்க்கு பறந்தார் காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி. மூன்று பேருமே தொகுதிக்கும் மாவட்டத்துக்கும் சம்மந்தம் இல்லாதவா்கள். இதில் குமரி அனந்தன் ஏற்கனவே நான்கு முறை எம்எல்ஏவாகவும், ஒருமுறை எம்பியாகவும் இருந்தவா். அவா் தம்பி வசந்தகுமார் ஏற்கனவே நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்து இ்ப்போது கன்னியாகுமரி எம்பியாக இருக்கிறார். இவரால்தான் இந்த தொகுதிக்கு இடைத்தோ்தல் நடக்கிறது. இப்போது அண்ணன் குமரி அனந்தனுக்கு சீட் கேட்கிறார். இதனால் தொகுதி மக்களும் நெல்லை காங்கிரசாரும் அதிருப்தி. அதுபோக குமரி அனந்தன் முதுமை காரணத்தால் அவருக்கு டாட்டா காட்டியது காங்கிரஸ் தலைமை.

Advertisment

ruby manoharan

அடுத்து ஊா்வசி அமிர்தராஜ், ஊா்வசி சோப்பு மற்றும் சென்னையில் கல்லூாரி நடத்தி வருகிறார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியை சோ்ந்தவா் இவருடைய தந்தை ஊா்வசி செல்வராஜ் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏவாகஇருந்வா். கடந்தமுறை அந்த தொகுதியை குறி வைத்து காய்களை நகா்த்தியவருக்கு கடைசியில் காங்கிரஸ் தலைவராக இருந்த இளங்கோவனால் கை நழுவி போனது. அதன் பிறகும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை கண் வைத்து காங்கிரசாருக்கம் தொகுதி மக்களுக்கும் வாரி இறைக்கிறார். இதனால் ஸ்ரீவைகுண்டம் காங்கிரசார் அவரை நாங்குநேரிக்கு அனுப்ப தயாரும் இல்லை நாங்குநேரி காங்கிரசார் அவரை ஏற்றுக்கொள்ளவும் தயாரும் இல்லை.

இற்கிடையில் குமரி அனந்தனுக்கு சீட் இல்லை என்ற முடிவானதும் குமரி அனந்தனும் வசந்தகுமார் எம்பியும் ரூபி மனோகரனுக்கு "கை "காட்டினார். இதனால் ஊா்வசி அமிர்தராஜ்க்கு "கை " தளா்ந்தது. இ்ந்த நிலையில்தான் ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் டெல்லி தலைமை "கை" கொடுத்தது.

Advertisment

ரூபி மனோகரன் கன்னியாகுமாரி மாவட்டம் முன்சிறையை சோ்ந்தவா். தொழில் செட்டில் எல்லாமே சென்னைதான். அங்கு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். சென்னையில் நடக்கிற காங்கிரஸ் நிகழ்ச்சிகளுக்கு இவா் நிதி இல்லாமல் இருக்காது.

கடந்த பாராளுமன்ற தோ்தலில் கன்னியாகுமரி தொகுதி சீட்டுக்காக டெல்லியில் முகாம் போட்டு கடுமையாக போராடியவா். இவருக்கு தான் சீட் என்று கன்னியாகுமரியில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் வசந்தகுமாருக்கே கிலியை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில் சென்னையில் ரூபி பில்டர்ஸ் என்ற கட்டுமானம் நிறுவனம் உட்பட பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதிமுக வேட்பாளா் ரெட்டியா்பட்டி நாராயணனை எதிர்கொள்ள பணம் பலம் படைத்தவா்தான் காங்கிரசுக்கு தேவை என்பதால் காங்கிரசார் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் தலைமை கை கொடுத்து இருக்கிறது.

ரூபி மனோகரனும் எத்தனை கோடியானாலும் நான் செலவு செய்ய தயார் கட்சி நிதி கூட தேவையில்லை என தலைமையிடம் கறாராக கூறிவிட்டாராம். இந்தநிலையில் கட்சியில் உள்ள எதிர்ப்பை அவா் எப்படி சமாளிக்க போகிறார். காங்கிரஸ் என்றாலே குழப்பம் தானே அது கலங்கி தெளியும் என்ற "நம்பிக்கை" யில் ரூபி மனோகரன் களம் காண போகிறார்.

congress By election naanguneri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe