Advertisment

டாஸ்மாக்கை திறந்துவிட்டு அத்தியாவசிய கடைகளின் நேரத்தைக் குறைப்பதா? - சீமான் கேள்வி!  

naam thazhamilar seeman quetion to tamilnadu govt

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 26,465 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில்197பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த கரோனாஉயிரிழப்பு 15,171 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படிமளிகை, காய்கறிக் கடைகள் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம். வணிக வளாகங்களில் உள்ள பலசரக்கு கடைகள், காய்கறிக் கடைகள் இயங்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல்டாஸ்மாக் கடைகள் மதியம் 12 முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டு நேற்று முதல் நடைமுறையில் உள்ளது.

Advertisment

naam thazhamilar seeman quetion to tamilnadu govt

இந்நிலையில் ''டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டுஅத்தியாவசிய கடைகளின் நேரத்தைக் குறைப்பதா?'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்துஅவர் கூறியுள்ளதாவது, ''டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு நேரத்தில் கட்டாயம் மூட வேண்டும். டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டுஅத்தியாவசிய கடைகளின்நேரத்தைக் குறைப்பதா? டாஸ்மாக்கை மூடிவிட்டுஅத்தியாவசிய கடைகளின்நேரத்தை மாலை 6 மணி வரை நீட்டிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

naam thamizhar ntk seeman tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe