naam thamizhar party struggle in erode

மத்திய பா.ஜ.க மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடு முழுக்க பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்துஆதரவுப் போராட்டங்களைநடத்திக் கொண்டிருக்கும் நிலையில்,நாம் தமிழர் கட்சி சார்பில் 11-ஆம்தேதி ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்துநிறுத்தம் அருகே, மத்திய பா.ஜ.க அரசையும்,மாநில அ.தி.மு.க அரசையும் கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் நித்யான்ந்த் தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் லோகு பிரகாஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ''மத்திய அரசே...மோடி அரசே... விவசாயிகள் விரோத... மக்கள் விரோத... வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு...மோடி அரசுக்குத் துணை போகிற எடப்பாடி அரசைக் கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்...'' என்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கோஷம் எழுப்பினார்கள். நிர்வாகிகள் சீதாலட்சுமி, கோமதி, சத்யா, சங்கீதா உள்பட பல்வேறு பெண்நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.குறிப்பாகஇப்போராட்டத்தில்பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.

Advertisment