
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நகர்ப்புறஉள்ளாட்சித்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின்இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி, வேலூர், மதுரை, கடலூர் மாநகராட்சிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூர், காஞ்சிபுரம், சிவகாசி, நாகர்கோவில், கோவை மாநகராட்சிகள் வேட்பாளர் பட்டியலும், ஓசூர், ஆவடி, கும்பகோணம் மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.