மதுரை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "வரும் தேர்தலில் வீட்டிற்கு இலவசமாக கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடவுள்ளேன். பாஜகவிற்கும், காங்கிரஸுக்கும் உள்ள வித்தியாசம், நாட்டை யார் விரைந்து விற்பது என்பதில் தான். ஆளுங்கட்சி மக்களை ஏமாற்றி வரும் நிலையில் நாங்கள் மக்களை மாற்ற முயற்சிக்கிறோம்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
கட்சி மீதும், கட்சியினர் மீதும் வழக்கு தொடர்வோர் மீது நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுப்பேன். வழக்கு தொடர்வோர் எங்கள் ஆட்சி அமைவதற்குள் இறந்து விடுங்கள். இல்லையேல் விளைவுகளை சந்திப்பீர்கள். நடிகனை அரசியலுக்கு வா என அழைக்கும் அவலம் உள்ளது, ரஜினி அரசியலுக்கு வரட்டும். ரஜினிக்காக I AM WAITING" என்று இவ்வாறு சீமான் பேசினார்.