எங்களுக்கு எண்ணிக்கை முக்கியமல்ல எண்ணம்தான் முக்கியம்;ஒருநாள் உறுதியாக வெல்லுவோம்-மதுரையில் சீமான் பேச்சு  

மதுரையில் மாவீரர்கள் நாள் நினைவேந்தல் கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது.இலங்கையிலுள்ள மாவீரர்கள் கல்லறையின் பொறுப்பாளர் நினைவு தீபம் ஏற்ற, சீமான் மற்றும் கட்சியினர் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். தமிழகமெங்கும் இருந்து நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்தனர். நினைவேந்தல் நிகழ்ச்சியும் கொடியேற்றமும் நடந்தது.

NAAM TAMILNAR SEEMAN SPEECH

அதனை அடுத்து மேடையில் பேசியசீமான், மறக்கமுடியுமா இந்நாளை. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்ததும் அரசே மாவீரர்கள் நினைவேந்தல் நடத்தும்.தமிழினத்தின் தலைவன் என்றால் நம் அண்ணனை தவிர யாருக்கும் தகுதி இல்லை. திராவிட முன்னேற்ற கழகம் தமிழுக்கானது என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். போரில் இறந்தவர்கள் யாருக்காக இறந்தார்கள் தமிழுக்காக, தமிழர்களுக்காக. ஏன் திராவிட கட்சிகள்ஒரு பூக்கூட போடவில்லை, விளக்கேற்றவில்லை. செங்கொடி யாருக்காக இறந்தார் 7 பேர் விடுதலைக்காக, 7 விடுதலையை பற்றி வாய் நிறையபேசுபவர்களே தங்கைசெங்கொடிக்கு ஒரு படம் வைத்து விளக்கேற்றியதுண்டா?, ஆனால் மகளிர்அணியின் குறியீடாக செங்கொடியை ஏந்தி நிற்கிறது நாம் தமிழர் கட்சி.

நமக்காக உயிர் தியாகம் செய்தவர்களை கடந்து மறந்து போனால் அதைவிட வரலாற்று துரோகம் இருக்க முடியாது. நான்ஒரு சத்தியம் பேசினேன் எந்த பதவிக்காக என் இன அழிவை சகித்துக் கொண்டீர்களோ அந்த பதவி உங்கள் வாழ்நாளில் இனி உங்களுக்கு எப்போதும் கிடைக்க விடமாட்டேன்.இப்போதுசொல்கிறேன் ஒருபோதும் உங்களை வெல்லவிடமாட்டேன். நான் வெல்வது வீழ்வது அல்ல என் பிரச்சனை. உங்களை வெல்ல விடமாட்டேன் அதுதான் எனது முதன்மை நோக்கம். உலகிலேயே வெறும் அரசியல் மட்டும் பேசாமல் மண், உயிர், சூழியல் பற்றி பேசும் ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர்தான்.எங்களுக்கு எண்ணிக்கை முக்கியமல்ல எண்ணம்தான் முக்கியம். உறுதியாக ஒருநாள் வெல்லுவோம்.

NAAM TAMILNAR SEEMAN SPEECH

மாவீரர்களின் நினைவு சுடர் மீது ஆணையிட்டு சொல்கிறேன்எழுதி வைத்துக்கொள்ளுங்கள் கண்டிப்பாக வெல்லுவோம். நான் இருப்பேன் இல்லாமல் போவேன் ஆனால் என் கொள்கையும், தத்துவமும் வெல்லும்.சி.ப.ஆதித்தனார் நினைத்திருப்பாராசீமான் என்று ஒருவன் வருவான் சிவகங்கையிலிருந்து அவன் எடுத்துக்கிட்டு அடி அடியென்று அடிப்பான் என்று உறுதியாக நினைத்திருக்க மாட்டார்.ஒரு இனம் போராடி இறந்தது என்ற வரலாற்றை ஒரு இனம் போராடி வென்றது என நீங்கள்தான் மாற்ற வேண்டும். அந்த பொறுப்புடன் செயலாற்றுங்கள்என கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.

naam tamilar prabakaran seeman
இதையும் படியுங்கள்
Subscribe