Skip to main content

''ஏழைகளை மறைக்க சுவர் கட்டிய கல்லில் வீடு கட்டிகொடுத்திருக்கலாமே''- சீமான் விளாசல் 

கடந்த 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு தாம்பரத்தில் அன்னை அருள் திருமண அரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக “சமூக ஊடக ஆர்வலர்கள் ஒன்றுகூடல்-2020” நிகழ்வு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  
 

இந்த கூட்டத்தின் பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசுகையில்,


 

seeman

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்தை விசாரணை ஆணையம் அழைத்துள்ளது. ஆனால் நான் நேரில் ஆஜரானால் கூட்டம் கூடி சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூடு சம்பவத்தின் போதுமட்டும் வந்தீர்களே அப்போது சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தெரியவில்லையா? சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அளவிற்குத்தான் உங்கள் ரசிகர்களை நீங்கள் தயார் செய்து வைத்துள்ளீர்களா? 66 லட்சம் ரஜினிகாந்துக்கு எதற்கு விலக்களித்தார்கள் அதே வழக்குத்தானே சசிகலா மீதும், ஆனால் ரஜினிக்கு மட்டும் சலுகை காட்டுகிறீர்கள் ஏன்? .
 

அம்பேத்கர் சொன்னதைத்தான் திரும்ப திரும்ப நினையூட்ட விரும்புகிறேன். மாநிலங்கள், பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஒரே நாடு என்று செயல்பட தொடங்கினால் உள்நாட்டு போர் வரும் என அம்பேத்கர் அறிவுறுத்துகிறார். பழமொழி பேசக்கூடிய மக்கள், பல மத வழிபாடுகளை கொண்ட மக்கள், பன்முக தன்மைகொண்ட மக்கள் வாழும் ஒன்றியம் இது. இதை இந்து நாடு என காட்ட செயல்பட தொடங்கினால் நாடு சுக்கு சுக்காக உடையும் என எச்சரித்துள்ளார். ஜிஎஸ்டி வரி என எங்களிடம் வாங்கிக்கொண்டு சென்ற 6000 கோடியை கொடுத்துவிட்டீர்களா? நீங்கள் வாங்கிய வரி என்னவாக எங்களுக்கு திரும்ப வந்தது. 4030 கோடி  தூயக் காற்றுக்கு என ஒதுக்குகிறீர்களே படிக்கும் போது உங்களுக்கே சிரிப்பா இல்லையா? 

டிரம்ப் வருகைக்காக ஏழைகளை மறைக்க 7 அடியில் கல்லுவெச்சு சுவர் எழுப்புகிறீர்களே அந்த கல்லில் வீடுகட்டி கொடுத்திருக்கலாமே. இப்படிப்பட்ட ஆட்சியாளர்களை வலராற்றில் எந்த நாடும் பெற்றிருக்காது. நீங்களே 2020-ல் தான் எல்லோருக்கும் வீடு என கூறுகிறீர்கள் அப்படி வீடில்லாத மக்களிடம் என்ன சான்றிதழ் இருக்கும், பழங்குடியினரிடம் என்ன ஆவணம் இருக்கும், ஆண்டுதோறும் முக்கூடல் திருவேணி சங்கமத்தில் குளிக்க வரும் கோடிக்கணக்கான சாமியார்களிடம் என்ன ஆவணம் இருக்கும். இந்த சட்டமே எல்லாருக்கும் எதிரானது ஏதோ இஸ்லாமியர்களுக்கும் மட்டும்தான் எதிரானது அவர்கள் மட்டும் போராடிக்கொள்ளட்டும் என விடக்கூடாது. முதல்வர் யார் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார் என கேட்டுள்ளார். நான் காட்டுகிறேன் புதுக்கோட்டையில் முகமது யூசப் என்ற ஒருவர் வங்கியில் கணக்கு புத்தகத்தை கொடுத்துள்ளார். முகமது யூசப் என்ற பெயரை பார்த்தவுடன் மைக்ரேசன் என வாங்கி அலுவலர் சீலிட்டு கொடுத்துவிட்டார். பின்னர் ஜமாத்து காரர்களை கூட்டிக்கொண்டு போய் சண்டையிட்ட பிறகு முறையிட்ட பின் ஆதார் அட்டை கொடுக்காததால் தான் அப்படி நடந்தது என கூறுகிறார். ஆதார் கொண்டுவாங்க எனதானே முதலில் வாங்கி ஊழியர் சொல்லியிருக்கனும். பேரை பார்த்தவுடன் மைக்ரேஷன் என்றால் எப்படி.

வாழமுடியாமல் ஒருவன் தாயகத்துக்கு வருகிறான் என்றால் அவனை ஏதிலியாக பார்க்கவேண்டுமே தவிர சாதி, மதம், இனம், மொழியாக பார்க்கக்கூடாது.  அப்படி பார்த்தால் உலகில் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அந்த நாடுகள் மதம் இனம் பார்த்தால் தமிழர்கள் அங்கு வாழமுடியுமா? இது காந்தியின் தேசம், எந்த உயிரையும் கொல்லக்கூடாது என போதித்த புத்தனின் பூமி, ஈ எறும்புக்கூட சாகக்கூடாது என மயிலிறகால் கூட்டிவிட்டு நடந்த மகாவீரர் மண் இதை செய்வது கொடுமை.

உங்களுக்கு வாக்கு செலுத்தி அதிகாரத்தில் உட்காரவைத்தது குடிகளுக்கு நல்லது செய்ய நாங்கள் குடிமக்களா இல்லையா என சோதிக்க அல்ல. நாங்கள் உங்கள் நாட்டின் குடிமக்களா இல்லையா என தெரியாமல்தான் எங்கள் வாக்குகளை பெற்றீர்களா? இதேபோல் அரபு இஸ்லாமிய நாடுகளில் வாழும் இந்தியர்களை இந்துக்கள் என அந்த நாடுகள் அனுப்பிவைத்தால் வருபவர்களுக்கு இடம் தந்து, வேலைவாய்ப்பு தந்து வாழவைக்க நாடு தயாராக இருக்கா?

முதலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் குடியுரிமை சான்றிதழை காட்டட்டும் உங்களுக்கு வேறு சட்டம் எங்களுக்கு வேறு சட்டம் இல்லை முதலில் நீங்கள் காட்டுங்கள் பின்னர் நாங்கள் காட்டுகிறோம்  என்றார். 

மேலும், 250 கோடி கொடுத்து பிரசாந் கிஷோர் போன்ற ஆட்களை வேளைக்கு நியமிக்க முடியல எனவே இருக்கிற நாங்கள் எல்லாம் சேர்ந்து எப்படி பணியாற்றலாம் என திட்டமிட்டுவருகிறோம் அதற்கான ஒன்றுகூடல்தான் இது எனவும் கூறினார்.