Advertisment

தமிழக முதல்வர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு!- குற்றச்சாட்டு பதிவு நாளைக் குறிப்பிட்டு ஒத்திவைப்பு!

தமிழக முதல்வர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பிப்ரவரி 18ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த செப்டம்பர் 14- ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக செய்தி வெளியானது.

naam tamilar party seeman chennai district court

அந்தக் கருத்தும், செய்தியும் தமிழக அரசுக்கும், முதல்வரின் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் இருப்பதாக சீமான் மீதும், தொலைக்காட்சி மீதும், அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மற்றும் தண்டிக்க வேண்டும் என. தமிழக முதல்வர் சார்பாக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

தொடர்ந்து சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு சீமான் இன்று (04/02/2020) நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து, சீமான் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிபதி வழக்கை வரும் 18- ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

chennai district court Naam Tamilar Katchi seeman
இதையும் படியுங்கள்
Subscribe