Naam Tamilar Party administration raises controversy in government school

சிதம்பரம் ரயிலடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியை கண்ணகி உதவி தலைமை ஆசிரியர் ராஜ்மோகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளருமான மணிவாசகம் என்பவர் தேசிய கொடியை ஏற்றி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றுகளை வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வு பள்ளியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறுகையில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் தான் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று உத்தரவு உள்ளது. அவர் இல்லாத நேரத்தில் உதவி தலைமை ஆசிரியர் ஏற்றலாம். அதை மீறி நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொடியேற்றியதுதவறு என தெரிவித்துள்ளனர்.

Advertisment

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான இவர் எந்த அரசு பொறுப்புகளிலும் இல்லாத சூழலில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.