நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த செப்டம்பர் 14- ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

naam tamilar katchi seeman chennai district court tn govt

அந்த மனுவில், தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாகப் பேசிய சீமானை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.